இளங்கலை இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கு இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் படிக்க கட்டாயமில்லை என ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.
2021-22 கல்வி ஆண்டிக்காக இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலாஜி பாடத்திட்டங்களுக்கான ஒப்புதல் கையேடு ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. அதில் இளங்கலை பொறியியல் (இன்ஜினியரிங்) மற்றும் தொழில்நுட்ப (டெக்னாலஜி) படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளநிலை பொறயியல் படிப்புகளில் சேருவதற்கான கல்வி தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் விவசாயம், உயரியல், உயரி தொழில்நுட்பம், தொழிற்படிப்புகள், இன்பர்மேட்டிக்ஸ் ப்ராக்டிசஸ், இன்ஜினியரிங் கிராபிக்ஸ், பிசினஸ் ஸ்டடிஸ், தொழில்முனைவோர் ஆகிய பாடங்களில் ஏதுாவது மூன்றை படித்திருந்தாலே பொறியியல் படிப்புகளில் சேரலாம் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. வரும் 2020-21 கல்வி ஆண்டில் இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் எனவும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. கணிதம், இயற்பியல் பாடங்களை தவிர, பிற பாடங்களை எடுத்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் இணைப்பு படிப்பு நடத்தும். பிளஸ் 2 பொதுதேர்வில் 45 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறுபவர்கள் பொறியயல் படிப்புகளில் சேரலாம். பட்டியல் இன மாணவர்கள் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் போதும். பொதுவாக பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் முதன்மை பாடங்களாக எடுத்து படித்தால்தான் இளங்கலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர முடியும். இந்த நிலையில் ஏஐசிடிஇ இத்தகைய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.