சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் முதுகலை, முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் 2021-22ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., உள்ளிட்ட பல்வேறு முதுகலை படிப்புகள், முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ள மாணவர்கள், சென்னை பல்கலைக்கழகத்தில் தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக, ரூ.354ஐ ஆன்லைனில் செலுத்தி சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விருப்ப தேர்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை படிப்புகளுக்கு ஜூன் மாதம் 15ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். அதேபோல், முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு சான்றிதழ்களுக்கு கிண்டியில் இயங்கிவரும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரத்தின் ஒற்றைச்சாளர முறைப்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.