You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Padmasree awardee Badrappan | ஒயில் கும்மியில் புரட்சி செய்த பத்திரப்பன் -க்கு பத்மஸ்ரீ விருது

Padmasree awardee Badrappan | ஒயில் கும்மியில் புரட்சி செய்த பத்திரப்பன் -க்கு பத்மஸ்ரீ விருது

மத்திய அரசு தனது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை கோவை மாவட்டத்தை சேர்ந்த நடன ஆசிரியரான தோழர் பத்திரப்பனுக்கு வியாழன் இரவு (25.1.2024) அறிவித்துள்ளது.

பத்மஸ்ரீ பத்திரப்பன் எந்த ஊர் 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூர் என்னும் அழைக்கப்படும் தாசம்பாளையத்தில் மாரன்ன கவுடருக்குமு், ரங்கம்மாளுக்கும் பிறந்தவர் பத்திரப்பன். இவர் 16.4.1936ஆம் ஆண்டு பிறந்தவர் மற்றும் தனது பள்ளி படிப்பை எட்டாம் வகுப்பு வரை முடித்துள்ளார். 

பத்திரப்பன் குடும்பம் 

இவது மனைவி மாதம்மாள். மாதம்மாள் காலமாகிவிட்டார். இவரது மகன் நக்கீரன் அவர் இறந்துவிட்டார். இவரது மகள் முத்தாம்மாள். தற்போது இவர் மகள் முத்தமாள் வீட்டில் தங்கி விவசாயம் செய்து வருகிறார். 

பத்திரப்பன் ஒயில் கும்மி பயணம் 

தனது சிறுவயது முதலே இவருக்கு கிராமிய கலை மீது அதீத பற்று இருந்தது. தற்போது அதுவே இவர் மூச்சாக கொண்டு வாழ்ந்து வருகிறார். தனது 20 வயதில் முதல் குருவான தொட்டன்னா கவுடர் மூலம் கிராமிய கலையை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அவரிடம் கற்றுக்கொண்ட அாிச்சந்திர கும்மியை, ஊர் ஊராக சென்று திருவிழாக்களில் நடத்தி வந்தார். அதன்பின் திருமப்பா கவுடர் எனும் கிராமிய கலைஞரிடம் 30 பேர் கொண்ட குழுவில் ஒருவராக இடம்பெற்று வள்ளிகும்மி கற்றுக்கொண்டு தனது திறமையை மேம்படுத்திக்கொண்டார். 

வள்ளி ஒயில் கும்மி ஆண்கள் மட்டும் நடனமாடி வந்த நிலையில், இவரது முயற்சியால் முதல் முதலாக ஒயில் கும்மி ஆட்டதை பெண்களுக்கு கற்றுக்கொடுத்து, நடனமாட வைத்துள்ளார் என்பது ஒரு பெண் புரட்சிதான். அதுமட்டுமன்றி, தோழர் பத்திரப்பன் மக்கள் பிரச்னைகளை பாடல் வடிவில் எழுதி, கும்மியில் மக்கள் முன்னியில் அரங்கேற்றம் செய்துள்ளார்.  ஒயில்கும்மியின்போது, பிரம்மாண்டமான ஒலிபெருக்கி, அலங்கார விளக்குகள் கிடையாது, தனது ரத்தம் சதையுமே கொண்டு, இந்த கலையை கற்றுக்கொடுத்தள்ளார். 

மக்களை வாழ்வு நெறிமுறைகளை உருவாக்கியதில் கிராமிய கலைக்கும் பங்கு உள்ளது என அவர் கூறுகிறார். ஆடி பாடுவதால் மனிதனின் உள்ளம் மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் எனவும் அவர் கூறுகிறார்.  அதுமட்டுமின்றி இக்கலையை பாதுகாப்பது முதன்மையான நோக்கமாக உள்ளது எனவும், அதனை அரசுகள் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைக்கிறார்.  

இவர் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் வள்ளி கும்மி எனும் கிராமிய நிகழ்ச்சி நடத்தி வந்தார். இதுதவிர கடந்த 20 ஆண்டுகளில் தாசனூரில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் 170 பேருக்கு இலவசமாக வள்ளி கும்மி, கிராமிய கலை நிகழ்ச்சிகளை கற்றுக்கொடுத்துள்ளார்.

மேட்டுப்பாளையம் நகராட்சி ராஜபுரத்தில் உள்ள மகளிர் குழுவிற்கு இலவசமாக வள்ளி கும்மி கிராமிய கலையை கற்றுக்கொடுத்துள்ளார். தமிழக அரசின் இவரை போற்றும்விதமாக கடந்த 2019ஆம் ஆண்டு கலை மாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் இவரை அங்கு கிராமிய வாய்மொழிப்பாட்டு ஆடல் கலைஞர் எனவும், கலை முதுமணி எனவும் அழைக்கப்படுகிறார். 

இரண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஒரே கிராமம் 

ஏற்கனவே இயற்கை விவசாயி பாப்பம்மாள் பட்டி இரண்டு வருடங்களுக்கு முன் பெற்றார். தற்போது பத்திரப்பன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.