பாலியல் வன்கொடுமை எதிரொலி, அரசு பள்ளியில் சிசிடிவி காமிர பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், ஆசிரியர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சமூகத்தில் ெபரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தனர். மேலும் அவர்கள், அனைத்து ஆசிரியர்களையும் மாற்ற வேண்டும், பள்ளியில் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் செய்தனர். இதனை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்து வந்தனர். இதனால், பள்ளியில் வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்று உறுதியளித்தார். இதனை தொடர்ந்து, அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.