பள்ளி நிதியை கையாடல் செய்ததாக கூறி, சென்னையை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோடம்பக்கத்தில் உள்ள கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் சக்திவேல். இவர் பள்ளி நிதியை தனது மனைவி வங்கி கணக்குக்கு மாற்றி, கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் வெளியே தெரியவே, உதவி தலைமை ஆசிாியர் முதல் சக ஆசிரியர்கள் என 62 பேர் இணைந்து தலைமை ஆசிரியர் பள்ளி நிதியை கையாடல் செய்துள்ளார் எனக்கூறி, அவர் மீது பள்ளி கல்வித்துறையிடம் சமீபத்தில் புகார் அளித்தனர். பள்ளி கல்வி அதிகாரிகள் இப்புகார் விசாரிக்க ஒரு குழு அமைத்து உத்தரவிட்டது. அக்குழு பள்ளிக்கு சென்று, பள்ளி வரவு செலவு கணக்குகளை ஆராய்ந்தது. தலைமை ஆசிரியர் நிதியை கையாடல் செய்தததை உறுதிப்படுத்தியாக தெரிகிறது. விசாரணை அறிக்கை கல்வித்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டாா், முன் அனுமதியின்றி, மாவட்டம் விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. . ஏற்கனவே, இவா் புதுக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலையில் பணியாற்றியபோது, நிதி முறைகேடு செய்துள்ளார். அவர் சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது அவர் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.