கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (நாளை) தொடங்கிவைக்கிறார்.
ஆறாவது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் ெசன்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஜனவரி 19ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதன் தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் பிரதமர் நநேரந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். சென்னை வரும் மோடிக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இப்போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரு விளையாட்டு அரங்கை பார்வையிட்டார்.