கேராளவில் பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிக்க அனுமதிக்காததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், ஆசிரியர் கார் மீது பட்டாசுகளை வீசினர்.
கேரளாவில் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. மலப்புரம் மாவட்டம் திரூரங்காடி பகுதியில் அரசு உதவிெபறும் பள்ளி ஒன்றில் நேற்று மாணவர்கள் தேர்வு எழுதினர். அப்போது சில மாணவர்கள் தேர்வு அறையில் காப்பியடிக்க முயன்றனர். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர், எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுத்தார். காப்பி அடிக்க முடியாத விரக்தியில் தேர்வு முடிந்த பின், பள்ளி முன்பு நின்று கொண்டிருந்தனர். ஆசிரியர் தன் காரில் புறப்பட்டபோது, மாணவர்கள் அவரது கார் மீது சரமாரியாக பட்டாசுகளை பற்ற வைத்து, கார் மீது வீசினர். பயங்கர சத்தத்துடன் வெடித்தால், ஆசிரியர் பீதியடைந்தார். அவர் காயமின்றி தப்பித்தார். போலீசார் மாணவர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.