தமிழக காவல்துறையின் தெற்கு மண்டல முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை போலீசார் இன்று பகிர்ந்துள்ளனா். அதில் ஒரு பள்ளி மாணவன் ரோட்டில் கேட்பாரற்று கிடந்த பணம், செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலை எல்லைக்குட்பட்ட பகுதியில், முத்துகுமார் என்ற மாணவன் தனது நண்பர்களுடன் சாலையின் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒரு பர்ஸ் மற்றும் செல்போன் கேட்பாரற்று கிடந்தது. இதை அறிந்த மாணவன், அதனை எடுத்துக்கொண்டு நேராக காவல்நிலையத்திற்கு சென்று, பத்திரமாக போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து காவல் ஆய்வாளர் திருமதி என்.எஸ். கீதா அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் பர்சிஸ் உள்ள முகவரியை தொடர் கொண்டபோது, அது கம்பம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. பர்ஸில் இருந்த ரூ.5000 பணம் மற்றும் செல்போன் மணிகண்டனிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டது. பள்ளி மாணவனின் நேர்மையான செயலை ஊக்குவிக்கும் வகையில், கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் பள்ளி மாணவனை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்தனர். இந்த சம்பவம் கம்பம் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, காவல்துறையின் வாழ்த்து மற்றும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதேபோல், அந்த முகநூல் பக்கத்தில் மாணவனின் பெயர் தவிர, எந்த தகவலும் இல்லை.