Kamaraj University Professor Arrest | மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் கைது
Kamaraj University Professor Arrest
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிவர் சண்முகராஜா. தென்காசி அருகே ஆலங்குடியை சேர்ந்த இவர் மீது மாணவிகள் பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், சில மாணவிகள் ஆளுநருக்கும் புகார் அனுப்பியுள்ளனர். எனினும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
Read Also: பெரியார் பல்கலை முன்னான் பதிவாளர் கைது செய்ய உத்தரவு
வரலாற்று துறையில் எம்ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவரை, உதவிபேராசிரியர் சண்முகராஜா உருவத்தை சொல்லி கேலி செய்வதும், கரும்பலகையில் படம் வரைந்து பல்வேறு வகைகளில் துன்புறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அந்த மாணவி கேட்டபோது, மாணவியின் ஜாதியை சொல்லி திட்டியுள்ளார். இதனை தொடர்ந்து, மாணவி பல்கலைக்கழக பதிவாளர், துணைவேந்தரிடம் புகார் அளித்தார். அதற்கு சண்முகராஜா மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னா, மாணவி நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் உதவி பேராசிரியர் சண்முகராஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.