Kalvitholaikaatchi CEO Issue | கல்வி தொலைக்காட்சி சிஇஓ நியமன உத்தரவு நிறுத்தி வைப்பு
kalvitholaikaatchi CEO Issues
மாணவர்கள் தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்பிக்கும் வகையில் கடந்த ஆட்சி அதிமுக காலத்தில் தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஆசிரியர்களை கொண்டு, அனைத்து பாடங்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை அனைத்து தரப்பிலும் வரவேற்பு இருந்தது. வழக்கம்போல், கல்வி தொலைக்காட்சியில் பணியாற்றிய சில ஊழியர்கள் நாளைடைவில் முறைகேட்டில் ஈடுபட்டதும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களையும் பணியிலிருந்தும் விடுவிடுப்பு செய்யப்பட்டனர்.
அதன்பின் கல்வி தொலைக்காட்சியை கவனித்த தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி அதிகாரி நிதி முறைகேடும் செய்ததாகவும் புகார் எழுந்தது. பின்னர், இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டது. கல்வி தொலைக்காட்சி பின்னடைவு சந்தித்தது.
கல்வி தொலைக்காட்சி சிஇஓ நியமன உத்தரவு
இந்த நிலையில், சமீபத்தில் கல்வி தொலைக்காட்சி மேம்படுத்த போகிறோம் என்று கூறிக்கொண்டு, தலைமை செயல் அதிகாரி என்ற பணியிடம் உருவாக்கி, அதில் தகுதி வாய்ந்த நபரை நியமிக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன்பு விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டது. இறுதியாக, சமீபத்தில் மணிகண்ட பூபதி என்பவர் எஸ்சிஇஆர்டி மூலம் நியமிக்கப்பட்டதாக கல்வி துறையின் கடிதங்கள் சமூக வலைதளங்களில் பரவின. அதில் இரண்டு ஆண்டு கால அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்றுவார் என்றும், அவருக்கு மாதம் சம்பளம் ரூ.ஒன்றரை லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பணி நியமன ஆணையை பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவருக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவே, அவரும் யூடிபர் ரங்கராஜ் பாண்டே தந்தி டிவியில் பணியாற்றியதாகவும், ரங்கராஜ் பாண்டே மற்றும் பூபதி அடுத்தடுத்து தந்தி தொலைக்காட்சி விட்டு வெளியேறதாகவும் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டன. பின்னர், சாணக்கிய யூடிபில் பூபதி பணியாற்றி வந்ததாகவும், அவர் ஆர்எஸ்எஸ் சிந்தாந்தவாதி எனவும் கூறப்பட்டது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் தனிப்பிரிவிக்கு புகார் மனு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Read Also:அகவிலைப்படி உயர்வு ஆசிரியர்கள் அப்செட்
சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து கல்வி அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அன்பில் மகேஷ், அவர் எந்த பின்னணி கொண்டவராக இருந்தாலும் கவலை கிடையாது, ஆனால் அவர்களின் செயல்பாடுகள்தான் முக்கியம் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த நிலையில், மணிகண்ட பூபதி பணியில் சேர வேண்டாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் வாய்மொழியில் தெரிவித்ததாக, சற்றுமுன் தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அவரது பணி நியமனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தந்தி டிவி செய்தியை வெளியிட்டுள்ளது. தற்போது வரை, மணிகண்ட பூபதி பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.