Kalvi Valarchi Naal at Gandhi Nagar ITK Center | கல்வி வளர்ச்சி நாள்
Kalvi Valarchi Naal at Gandhi Nagar ITK Center
முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசு அறிவித்து பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமச்சம்பட்டி கிராமம் காந்தி நகர் பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி கோவை மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் பேரா.க. லெனின்பாரதி அவர்கள் கலந்து கொண்டு "கல்வியும் காமராஜரும்" எனும் தலைப்பில் கலந்துரையாடினார்.
வட மாநில குழந்தைகளை கொண்ட இம்மையத்தில் காமராஜர் அவர்களின் கல்வி பணிகளையும், மதிய உணவு திட்டம் சீருடை உள்ளிட்ட நற்பணிகளும் நினைவு கூறப்பட்டது.
காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர் V. J.புவனேஸ்வரி அவர்கள் ஒருங்கிணைத்தார்.