Kalampalayam School | காளம்பாளையம் அரசு பள்ளியில் சுதந்திர தினவிழா
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காளம்பாளையம் உள்ளது. இந்த பள்ளியிவல் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 75வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தலைமை ஆசிரியை பி சூடாமணி வரவேற்று பேசினார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு ரங்கசாமி அவர்கள் தேசியக் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பள்ளியின் பால் கற்றுக்கொண்ட அனைத்து ஊர் பெருமக்களும் கலந்து கொண்டு சுதந்திர தின சிறப்புரையாற்றினர். இப்பள்ளிக்கு நன்கொடை வழங்கிய அத்தனை தன்னார்வலர்களுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் பள்ளியின் சார்பில் நன்றி கூறி பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மாணவ மாணவியர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இறுதியாக ஆசிரியை கலைவாணி நன்றி கூறினார்.
பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.