You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Kalai Thiruvizha prize distribution Ceremony | கலை திருவிழா பரிசளிப்பு விழா

Typing exam apply Tamil 2023

Kalai Thiruvizha prize distribution Ceremony | கலை திருவிழா பரிசளிப்பு விழா

Kalai Thiruvizha prize distribution Ceremony

2022-23ம் ஆண்டிற்கான கலைத் திருவிழா போட்டிகள் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. மாநில அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்கள் பட்டியல் EMIS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அவர்களால் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்படவுள்ளது. பரிசளிப்பு விழாவானது 12.01.2023 அன்று சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி பரிசளிப்பு விழாவிற்கு அழைத்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read Also: கலை திருவிழா போட்டி

வழிகாட்டு நெறிமுறைகள்:

மாநில அளவில் கலைத் திருவிழா பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒப்புகை கடிதம் பெற்று சார்ந்த பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்குதல் வேண்டும்.

வெற்றி பெற்ற மாணவர்கள் (முதல், இரண்டாம், மூன்றாம் இடம்) 10.01.2023 அன்று இரவு மாவட்டங்களிலிருந்து புறப்பட்டு 11.01.2023 அன்று காலை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வருகை புரிதல் வேண்டும்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு இரயில் / பேருந்து / சிற்றுந்து மூலமாக ஆசிரியர்களுடன் பாதுகாப்பாக அழைத்து வருதல் வேண்டும்.

மாணவர்கள் தவறாமல் 1 செட் பள்ளி சீருடை, போர்வை மற்றும் தங்குவதற்கான அத்தியாவசிய பொருட்கள் தவறாமல் கொண்டு வருதல் வேண்டும்.

சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் 12.01.2023 அன்று கலை நிகழ்ச்சியில் பங்கு பெறும் மாணவர்கள் அந்நிகழ்ச்சிக்கான அனைத்து கலைப் பொருட்கள் / படைப்புகளையும் தவறாமல் கொண்டு வருதல் வேண்டும்.

1:10 என்ற ஆசிரியர் மாணவர் விகிதத்தில் வெற்றியாளர்களுடன் பாதுகாப்பாக ஆசிரியர்களை நியமித்து மாணவர்களை சென்னைக்கு அழைத்து வருதல் வேண்டும்.

விழாவில் கலந்து கொள்ளும் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே கண்டிப்பாக வருகை புரிதல் வேண்டும். பேருந்துகளில் கலைத் திருவிழா சார்ந்த பேனர்கள் கட்டலாம்.

உதவி மையம்:

சென்னையில் கோயம்பேடு பேருந்து நிறுத்தம். எழும்பூர் மற்றும் சென்ட்ரல் இரயில் நிலையங்களில் கலைத் திருவிழா உதவி மையங்கள் பள்ளிக் கல்வித் துறையால் செயல்படும்.

இரயில் / பேருந்து / சிற்றுந்து வாயிலாக சென்னை வரும் அனைத்து வெற்றியாளர்களையும், உடன் வரும் ஆசிரியர்கள், உதவி மைய பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு அம்மையத்திற்கு அழைத்து செல்லுதல் வேண்டும்.

அம்மையத்தில் மாவட்ட வாரியாக மாணவ / மாணவிகளை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்கள் மற்றும் அவ்விடத்திற்கு அழைத்து செல்ல ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து வசதி குறித்த விவரங்களை பெற்று மாணவர்களை பாதுகாப்பாக தங்குமிடத்திற்கு அழைத்து செல்லுதல் வேண்டும். மாணவ/ மாணவியர்களுக்கு தனி தனியே தங்கும் வசதி வழங்கப்பட உள்ளது.

தங்குமிடம் செல்லுதல்

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உதவி மையம் வாயிலாக தங்குமிடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர்.

மாணவர்களை ஒத்திகைக்காக ஒத்திகைக்காக ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு காலை அழைத்து வருவர். ஒத்திகைக்கு பின் மாலை மாணவர்கள் பாதுகாப்பாக தங்குமிடத்திற்கு பேருந்துகளில் அழைத்து செல்லப்படுவர்.

> பரிசளிப்பு விழாவிற்கு வருகை புரியும் மாணவ / மாணவியருக்கு தங்குமிடம் வசதி, உணவளித்தல் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் மேற்கொள்ளப்படுகிறது.

போக்குவரத்து நிதி

இவ்வலுவலக செயல்முறைகள் நாள்.22.12.2022 ல் கண்டுள்ள கடிதத்தின்படி மாவட்டங்களுக்கு தொகை ரூ.5,00,000 வழங்கப்பட்டது. கூடுதல் போக்குவரத்து செலவினங்கள் ஏற்படின் அதன் விவரங்களை மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.