Kalai Thiruvizha | கலைத்திருவிழா பரிசளிப்பு விழா
Kalai Thiruvizha
பள்ளி கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா 2022-2023 மாநில அளவிலான வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின்னர், கலைத்திருவிழாவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்வில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யமொழி, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.
பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி நிகழ்வில் பேசியதாவது, கிராமப்புற மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த போதிய தளம் இல்லை. கலைத்திருவிழா பல மாணவர்களின் திறமையை வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கலைதிறனை ஊக்கும் வகையில் கலை திருவிழா நடத்தப்பட்டது, இதில் சுமார் 28.50 லட்சம் மாணவர்கள் போட்டியில் பங்கேற்று கலைத்திறனை வெளிப்படுத்தினர். கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கலைத்திருவிழாவை கொண்டாடுகின்றனர், இதற்கு காரணம் நமது தமிழ்நாடு முதலமைச்சர்.
மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தலுடன் கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கூறுவார்கள், அதுபோல் இந்த கலை திருவிழா அமைந்துள்ளது. சுமார் 1750 மாணவர்கள் மாநில அளவிலான கலைத்திருவிழாவில் வெற்றிபெற்று, பாிசு பெறுகின்றனர். அரசு பள்ளி வறுமையின் அடையாளாம் அல்ல, பெருமையின் அடையாளம். கலை வாழ்கை மூலம் பொதுவாழ்விற்கு வந்தவர் கலைஞர், அவர் வழியே முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளனர். அவர்கள் தலைமையில் கல்வித்துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துசெல்வேன். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, இங்கு வெற்றிபெற்றவர், சாதாரண வெற்றியை பெறவில்லை. லட்சக்கணக்கான மாணவர்களிடம் போட்டி போட்டி வெற்றிபெற்று இங்கு வந்துள்ளனர். அவர்களது துணிச்சல், தன்னம்பிக்கை, அறிவாற்றாலே காரணம். இதை பயன்படுத்தி தங்களது திறமைமையை மேலும் மேம்படுத்தவேண்டும். பள்ளி பாட புத்தகங்கள் தவிர, பள்ளி கல்வித்துறை கலைத்திறனையும், அறிவுத்திறனையும் மாணவர்கள் மத்தியில் ஊக்குவித்து வருகிறது. தமிழ்நாட்டில் 13,210 அரசு பள்ளிகளில் இருந்து 28,53,882 மாணவர்கள் 206 வகையான கலை போட்டியில் பங்கேற்று திறைமையை வௌிப்படுத்தினர். கல்வித்துறைக்கு பாராட்டுக்கள். கலைத்திறன் மூலம் மாணவர்கள் சிந்தனை திறன் மேம்படும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பு, எண்ணும் எழுத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்பாட பிரிவுகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, கல்வி கட்டணமும் செலுத்தப்படுகிறது. புதுமைபெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் படிக்கும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. நவீன ஆய்வகங்கள், ஸ்மாாட் வகுப்பறை அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் இடையே கணிதம், அறிவியல் சார்ந்த சிந்தனைைய ஊக்குவிக்க வானவில் மன்றம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைத்திருவிழா போட்டியில் முதல் 20 இடங்கள் பிடித்த மாணவர்களை கல்வி சுற்றுலா வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுகிறது. மாணவர்கள் கலையை தங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், கலை அறிவு மற்றுமு் பகுத்தறிவை இச்சமுாயத்திற்கு விதைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.