You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Kalai thiruvizha 2024 | கலை திருவிழா என்றால் என்ன | கலை திருவிழா போட்டி 2024

TN Dr Radhakrishnan award list pdf 2024

கலை திருவிழா என்றால் என்ன 

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் நோக்கில் கலை திருவிழா போட்டி நடத்தப்படுகிறது. குறிப்பாக, மாணவா்களிடம் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணரவும், நடைமுறையில் உள்ள கலை மரபுகள் பற்றி அவர்களுக்கு கற்பிக்கவும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலை வடிவங்களில் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தவும் கலை திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த போட்டி பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டி நடத்தப்படுகிறது. தற்போது 2024ஆம் ஆண்டு முதல் (இந்தாண்டு முதல்) 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டி நடத்தப்பட உள்ளது. நிபுணா்கள் மூலம் கலை சார்ந்த பயிற்சி, கலை அரங்க செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படும்.

இந்த போட்டியில் மாநில அளவில் கலையரசன், கலையரசி பட்டத்திற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் விருதுகள், சான்றிதழ்கள் வழங்குவார்.

’சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு‘

 

இந்தாண்டு கலை திருவிழா போட்டிகள், மாணவர்கள் இடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப்படுத்துதல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ’சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு‘ என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. 

கலை திருவிழா 2024 கருப்பொருள் 

ஒரு நாட்டின் வளத்திற்கு அவசியமானவை என்ற கருத்தின் அடிப்படையில் நம் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்து அவற்றை முறையாக பராமரித்து பசுமையாக்கி வருங்கால தலைமுறையினரும் பயன்படுத்திட வேண்டும் என்ற உயர்வான எண்ணத்தினை மாணவர்கள் இடையே வளர்த்திடும் நோக்கத்தில் இக்கல்வியாண்டில் ’சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு‘ என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. 

கலை திருவிழா வகுப்பு பிரிவுகள் 

பிரிவு 1 : 1 மற்றும் 2ஆம் வகுப்பு 

பிரிவு 2 : 3 முதல் 5ஆம் வகுப்பு வரை

பிரிவு 3 : 6 முதல் 8ஆம் வகுப்பு வரை

பிரிவு 4 : 9 முதல் 10ஆம் வகுப்பு வரை

பிரிவு 5 : 11 முதல் 12ஆம் வகுப்பு வரை

பிரிவு 1 (1 முதல் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டி விவரங்கள்)

போட்டிகள் விவரம் - கால அளவு: 

ஒப்பிவித்தல் போட்டி – மழலையர் பாடல் (தமிழ்) Tamil Rhymes Including Tamil (3 நிமிடங்கள்), கதை கூறுதல் (5 நிமி), வண்ணம் தீட்டுதல் (60 நிமி), Recitation - Rhymes (English) - (3 நிமி), மாறுேவடப்போட்டி (3 நிமி). 

பிரிவு 2:  (3, 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டி விவரங்கள்)

போட்டிகள் விவரம் - கால அளவு: 

பேச்சு போட்டி (3 நிமிடங்கள்), திருக்குறள் ஒப்புவித்தல் (3 நிமி), மெல்லிசை - தனிப்பாடல் (5 நிமி), தேச பக்தி பாடல் (5 நிமி), களிமண் பொம்மைகள் (60 நிமி), மாறுவேடப் போட்டி (3 நிமி), நாட்டுபுற நடனம் (குழு) (5 நிமி), பரதநாட்டியம் (குழு) (5 நிமி)

பிரிவு 3:  (6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டி விவரங்கள்)

வகை 1:  - கவிண்கலை, நுண்கலை: 

ஒவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் (45 நிமிடங்கள்), களிமண் சுதை ேவலைப்பாடு (90 நிமி), மணல் சிற்பம் (90 நிமி)

வகை 2:  – இசை (வாய்ப்பாட்டு)

செவ்வியல் இசை –- தனிப்பாட்டு (5 நிமி), நாட்டுப்புற பாடல் - தனிப்பாட்டு (5 நிமி), வில்லுப்பாட்டு –- குழு (1-4 பேர்) (10 நிமி)

வகை 3: நடனம் 

கிராமிய நடனம் - குழு (4-9ர பேர்) (5 நிமி), பாரதநாட்டியம் - குழு (5 நிமி)

வகை 4: நாடகம்

தனிநபர் நடிப்பு (5 நிமி), நகைச்சுவை வழங்குதல் (5 நிமி), பலகுரல் பேச்சு (5 நிமி)

பிரிவு 3:  (9, 10 வகுப்பு மாணவர்களுக்கு போட்டி விவரங்கள்)

 

பிரிவு 4:  (11, 12 வகுப்பு மாணவர்களுக்கு போட்டி விவரங்கள்)