கலை பண்பாட்டுத் துறையின் வாயிலாக, தமிழ்நாட்டினைச் சார்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீனபாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலைத் துறையில் செய்துள்ள அரும்பெரும் சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் அவர்களுக்கு
கலைச்செம்மல் என்னும் விருதினையும், ரொக்கப் பரிசினையும் வழங்கி ஊக்குவித்து வருகின்றது.
அரசாணை (நிலை) எண்.179, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (பண்1-2) துறை, நாள்.18.12.2020 இன்படி மரபுவழி பிரிவில் மூன்று கலைஞருக்கும், நவீனபாணி பிரிவில் மூன்று கலைஞருக்கும் என ஆண்டொன்றுக்கு ஆறு கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருது வழங்கிடவும், விருதுத்தொகை ரூ.50,000/-த்திலிருந்து ரூ.1,00,000/-ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டினை சார்ந்த மூத்த தகுதி வாய்ந்த மரபுவழி மற்றும்
நவீனபாணி ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருயது கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு கொண்டவர்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். கலை பண்பாட்டுத் துறையில் ஏற்கெனவே கலைச்செம்மல் விருது பெற்றவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கக் கூடாது.
விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு (Bio -Data), விண்ணப்பத்தாரரால் உருவாக்கப்பட்ட சிறயத கலைப்படைப்புகளின் புகைப்படங்கள் (10 எண்ணிக்கைகள்), பங்கு கொண்ட கலைக்காட்சியின் விவரங்கள், விண்ணப்பத்தாரரின் படைப்புத்திறன் பற்றிய செய்தித்தொகுப்புகள், இதுகாறும் பெற்றுள்ள சான்றிதழ்கள் அடங்கிய விவரங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 05.03.2021-க்குள் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
(இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்).
விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி
- ஆணையர்,
- கலை பண்பாட்டுத் துறை
- தமிழ் வளர்ச்சி வளாகம்,இரண்டாம் தளம்,
- தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008.
- தொலைபேசி:044-28193195, 28192748
- வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9