கை வீசம்மா கைவீசு!
கை வீசம்மா கைவீசு
பள்ளிக்குப் போகலாம் கைவீசுபாடம் படிக்கலாம் கைவீசு
கணிப்பொறி கற்கலாம் கைவீசுகவிஞர் ஆகலாம் கைவீசு
அறிவியலை அறியலாம் கைவீசுஅறிஞர் ஆகலாம் கைவீசு
அறிவை வளர்க்கலாம் கைவீசுஅன்பாய் வாழலாம் கைவீசு
விளையாடப் போகலாம் கைவீசுவெற்றி பெறலாம் கைவீசு
கை வீசம்மாகைவீசு