Kadampagudi primary school | குழந்தைகளுக்கு தண்டணை - தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
Kadampagudi primary school
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே கடம்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை பகவதி, கடந்த ஆறு மாதமாக சரிவர பள்ளிக்கு வராததால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள், மாவட்ட கல்வித்துறைக்கு பல்வேறு புகார்களை அனுப்பினர். இதுதொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் கடம்பாகுடி அரசு பள்ளியில் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளியில் படிக்கும் 2 சகோதரிகளின் தாய் முருகேஸ்வரி, தலைமை ஆசிரியை மீதான புகார்களை எடுத்துகூறினார்.
Read Also: அரசு பள்ளியில் சாதிய வன்கொடுமை?
இதனால், ஆத்திரம் அடைந்த தலைமை ஆசிரியை பகவதி, கடந்த 17ம் தேதி 2 சிறுமிகளையும் பள்ளிக்கு அனுமதிக்க மறுத்து வீட்டிற்கு அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக, சிறுமிகளின் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுத்து வீட்டிற்கு அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக சிறுமிகளின் தாய் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், திருவாடனை காவல்துறையும், வட்டார கல்வி அலுவலர் வசந்த பாரதியும் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், தலைமை ஆசிரியை பகவதி, மற்றும் உதவி ஆசிரியை கண்ணகி ஆகியோரை மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.