தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளனர். ஒரு சிலர் தவிர, பெரும்பாலனோர் அரசு பள்ளியில் பயின்றவர்களே. இதில் 90 சதவீதத்திற்கு மேல் அவரது குழந்தைகள், பேர குழந்தைகள் அரசு பள்ளிகளை புறக்கணித்து, தனியார் பள்ளியில் படிக்க வைக்கின்றனர். அவர்கள் கூறுவது அரசு பள்ளியில் கட்டமைப்பு சரியில்லை, ஆசிரியர் காலிபணியிடம் உள்ளிட்டவை. ‘ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கே உன்னை அற்பணி‘ என்பது சொற்ப ஆசிரியர்கள் முன்னுதரனமாக, தங்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்த்து, கல்விப்பணி தாண்டி, அரசு பள்ளி வளர்ச்சிக்காக பாடுகின்றனர்.
இன்னும் சில ஆசிரியர்கள் மனநிலை, அரசு பள்ளியில் சேர்ந்தால், அந்த பிரிவு மாணவர்களுடன், எனது குழந்தை படிக்க வேண்டுமா?, இதுவும் ஒருவகை தீண்டாமைதான். இன்னும் சிலருக்கு சமூக மதிப்பீடு பெறுவதற்கு, என் குழந்தை இந்த பெரிய தனியார் பள்ளியில் படிக்கிறார்கள் என்று கூறுவார்கள். இன்னும் சில ஆசிரியர்கள், ஏன் அமைச்சரே அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என கூறிக்கொண்டு, அவர்களது குழந்தைகளை தனியார் பள்ளியில்தான் படித்துவைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற விமர்சனமும் உள்ளது.அதற்கேற்றவாறும், தமிழ்நாடு அரசு தனது பங்குக்கு ஏற்ப, தனியார் பள்ளிகளை ஊக்குவித்து, லாபநோக்கு கல்வியாக மாற்றிவிட்டது. இதில் பெரும் மூளையாக செயல்பட்டு அரசியல்வாதிகளே, நோக்க பெற்றோர்களை சுரண்டி லாபம் ஈட்டுவதே. ஆனால், இதனையெல்லாம் தகர்த்து, ஆலந்தூரில் உள்ள மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். புதுக்கோட்டை அடுத்த திருக்கட்டளை பகுதியை பூர்வீகமாக கொண்டவர் நீதிபதி முருகேசன். 5 வயது மகள் புவனேஸ்வரியை திருக்கட்டளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மழலையர் பிரிவு வகுப்பில் சேர்த்து அங்குள்ள ஆசிரியர்களையே ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறார், நீதிபதி முருகேசன். அரசு பள்ளிகளில் கட்டணம் இல்லை. அதனால் இது, வறுமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மகளை அரசு பள்ளியில் சேர்த்தது ஏன்? என கேட்டதற்கு நீதிபதி முருகேசன் கூறியதாவது: சென்னையில் பல சர்வதேச மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. ஆனாலும், எனது மகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் முடிவை எடுத்ததற்கு காரணம் இருக்கிறது. அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல; நம் பெருமையின் அடையாளம் என்பதை காட்டவே அப்படி செய்தேன். தாய்மொழி வழிக்கல்விதான் ஒரு குழந்தைக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுக்கிறது. என் மகள் தமிழ் மொழியை மிகுந்த ஆர்வத்துடன் படிக்க வேண்டும் என நான் விரும்பினேன். சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களை பற்றியும் அவள் தெரிந்து கொள்ள வேண்டும். அனைவரிடமும் மனித நேயத்துடன் பழக வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும். மிக முக்கியமாக, தாய்மொழியில் படிப்பதால் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடியும். தாய்மொழியில் கற்கும் கல்வி மட்டுமே, எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்க உதவும். அரசுப் பள்ளிகள் கல்வியை மட்டும் வழங்கவில்லை. வாழ்க்கை பாடத்தையும் கற்றுக்கொடுத்து அவர்களது பக்குவமான மனிதர்களாக உருவாக்குகிறது என நீதிபதி முருகேசன் கூறினார். இன்றைய தினம் அரசு பள்ளிகளில் எல்லா வசதிகளும் உள்ளன. பல நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கூட அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான். தனியார் பள்ளியில் படித்தால்தான் சிறப்பான நிலையை அடைய முடியும் என்ற எண்ணம் தவறு என கூறும் நீதிபதி முருகேசன் புதுக்கோட்டை ஆலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி முருகேசன் தன் மகளை அரசு பள்ளியில் சேர்த்ததை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம் வரவேற்பு தெரிவித்தார். நீதிபதி போன்ற முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும்போது, ஆசிரியர்களுக்கு அது ஊக்கத்தை கொடுக்கும். மற்ற பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு அரசு பள்ளிகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் என சண்முகம் கூறினார். திருக்கட்டளை அரசு நடுநிலைப்பள்ளியில் 130 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 8 ஆசிரியர்கள் உள்ளனர்.