Job Mela at Coimbatore | கோவையில் நாளை வேலை வாய்ப்பு முகாம்
Job Mela at Coimbatore
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம், மலுமிச்சம்பட்டி இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நாளை நடைபெறுகிறது.
இவ்வேலை வாய்ப்பு முகாமில், 50க்கும் மேற்பட்ட ஐ.டி, ஆட்டோ மொபைல் நிறுவனங்கள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள், மார்க்கெட்டிங், சிஎன்சி, ஆபரேட்டர், எலக்ட்ரிக்கல் போன்ற நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. எட்டாம் வகுப்பு முதல் இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பம், ஐ.டி.ஐ படித்த அனைவரும் பங்கேற்கலாம்.
Read Also: Central Government Job Exam in Tamil
வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் 18 முதல் 35 வயதுக்குள் இருப்பின் கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை, பயோ டேட்டா, புகைப்படம் மற்றும் இதர சான்றிதழ்களின் அசல், நகலுடன் பங்கேற்கலாம். வேலை வாய்ப்பு முகாம், 25ம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். அவசியம் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.