Jawahar Nesan Quit State Education Policy | ஜவஹா் நேசன் மாநில கல்வி குழுவில் இருந்து விலகல்
Jawahar Nesan Quit State Education Policy
மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக திரு ஜவகர் நேசன் அறிவித்திருக்கிறார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை மாநில அளவில் பின்பற்றப்படும் கல்வி கொள்ளைக்கு எதிராக உள்ளது என்றும் அதனை ஏற்க முடியாது என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து தமிழகத்திற்கு என்று தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்ததோடு, இதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் கடந்தாண்டு ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
Read Also: நான் முதல்வன் திட்டம் கட்டணம் வசூல் செய்யக்கூடாது
இந்த குழுவினர் மாநில கல்விக் கொள்கையை தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள். இந்த குழுவில் உறுப்பினராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் ஜவஹர் நேசன் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் அந்த குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக பரபரப்பாக நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை அவர் இன்று வெளியிட்டு இருக்கிறார். எந்த நோக்கத்திற்காக இந்த மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு குழு அமைக்கப்பட்டதோ அதற்கு எதிராக செயல்பாடுகள் அமைந்திருப்பதாக அவர் குற்றம் காட்டியிருக்கிறார். மேலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாகவும், அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்படுமாறும் நிர்பந்தித்தாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து செயல்பட முடியாத சூழல் நிலவுவதாக அவர் அந்த அறிக்கையில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு நிலவியது.