பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை, பழைய ஒய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தையும் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்த போராட்டம் தடுக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளையும் வேலை நிறுத்த போராட்டத்தையும் பாமக ஆதரிக்கிறது.
அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றி வேலைநிறுத்த போராட்டத்தை தடுத்த நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.