Jacto – Geo Latest News | ஜாக்டோ ஜியோவினர் அலறவிட்ட அதிமுக எம்எல்ஏ
Jacto – Geo Latest News
அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகள் தான் திமுக ஆட்சிக்கு காரணம் என மனுவுடன் வந்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை நெளிய வைத்தார் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்.
அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் புதிய பென்ஷன் திட்டம் ரத்து உட்பட 13 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி வருகின்றனர்.
Read Also: ஜாக்டோ ஜியோ ஏப்ரல் 11ல் கோட்டை முற்றுகை
பல கட்ட போராட்டத்திற்கு பின், நேற்று 234 தொகுதிகளிலும் மக்கள் பிரநிதிகள், அமைச்சர்களிடம் மனு கொடுத்து தங்களுக்காக குரல் கொடுக்கும்படி கேட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி பன்னீர்செல்வம் அணியினை சேர்ந்த அதிமுக எமஎல்ஏ அய்யப்பனிடம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனு கொடுத்தனர்.
அவர்களிடம் எம்எல்ஏ, கடந்த தேர்தலில் 43 தொகுதிகளில் அதிமுக தோல்விக்கு காரணம் நீங்கள் அளித்த தபால் ஓட்டுக்கள்தான். 43 தொகுதிகள் கூடுதலாக நாங்கள் பெற்றிருந்தால் அதிமுக ஆட்சி அமைந்திருக்கும். இருந்தாலும் உங்கள் கோரிக்கைகள் குறித்து வரும் கூட்டத்தொடரில் பேசுவேன் என உறுதியளித்தார்.