Also Read: ஜாக்டோ ஜியோ மாநாடு எந்த பயனிமில்லை
மாநாடு இரவு முடிந்த நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பினர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்த 17 ஆசிரியர்கள் ஞாயிறன்று வேன் மூலம் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வாகனம் பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் முன்னே சென்று கொண்டிருந்த லாரியின் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தின்போது, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த 11 ஆசிரியர்கள் விபத்தில் சிக்கினர். அதிர்ஷடவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை, சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். ஆசிரியர்கள் விவரம், முனியான்டி (44), மாயகிருஷ்ணன் (54), முருகேசன்(56), தாமரை செல்வி (43), ஆதிமுருகன் (48), முத்துசாமி (54), வேலு (57), சுந்தரராஜ் (49), முத்துலட்சுமி (57), பெரிய கருப்பன் (56), அவ்வையார் (49) உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் சக ஆசிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.