ITK Latest News | இல்லம் தேடி கல்வி திட்டம் தொடரும்
ITK Latest News
பள்ளி கல்வி மானியக்கோரிக்கை நேற்று சட்டசபையில் நடந்தது. பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி பேசினார். அப்போது பள்ளி கல்வித்துறையின் கொள்கை விளக்கக்குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில் இல்லம் தேடி கல்வி திட்டம் வரும் கல்வியாண்டு அதாவது 2023-2024ஆம் கல்வி ஆண்டிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதில் கூறியிருப்பதாவது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளி, கற்றல் இழப்பை ஈடுசெய்வது ஆகிய உயரிய நோக்கங்களுடன் தமிழ்நாடு முதல்வர் அவர்களால் அக்டோபர் 2021இல் கொண்டுவரப்பட்ட ஒரு சிறப்பு திட்டமாகும். மாநிலம் முழுவதும் இதில் பதிவு செய்த 7.46 லட்சம் தன்னார்வலர்களில் 1.89 லட்சம் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, களத்தில் பணியாற்றுகின்றனர்.
இத்திட்டத்தை சீரிய முறையில் வழிநடத்துவதற்காக மாநிலம் மற்றும் பள்ளி ஆகிய மூன்று நிலைகளில் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியின் அடிப்படையான எண்ணறிவினையும், எழுத்தறிவினையும் அனைத்து மாணவர்களும் பெற்றிருக்க வேண்டியது மிக அவசியம் என்பதை மனதில்கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு இக்குழுக்கள் உறுதுணை புரிந்து வருகிறது.
Read Also: ITK Salary Issue
குழந்தைகளிடம் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், வாசிப்பு வழக்கத்தை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும் வகையிலும் பள்ளி கல்வித்துறை, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் ரீட் அலாங் செயலியின் மூலமாக தொடர் வாசிப்பு மாரத்தான் நடத்தப்பட்டது. 12 நாள்களில் 263 சொற்களை மாணவர்கள் வாசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பெருந்தொற்றினால் குழந்தைகளிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியில் 3ல் 2 பங்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் சரி செய்யப்பட்டது என கலி.போர்னியா சாண்டியாகோ பல்கலைக்கழகம் பேராசிரியர் கார்த்திக் முரளிதரன் மற்றும் அபிஜித் சிங் ஆகிேயாரால் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
2023-24ஆம் கல்வி ஆண்டிற்கு இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.226.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.