தமிழகம் அல்லாமல் வேறு மாநிலங்களில் தேசிய திறந்த நிலை பள்ளியில், பள்ளி படிப்பை படித்தவர்கள் அந்த மாநில பாடத்திட்டங்களுக்கு தமிழக பாடத்திட்டங்கள் இணையானதா அல்லது வேறு மாநிலங்களில் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்களில் படித்திருந்தாலும் தமிழகத்தில் இணையானதா என்று சரி பார்த்து அதற்கான சான்றிதழ் பெற்றால்தான் தமிழகத்தில் உயர் கல்வி படிக்கவோ அல்லது வேலை வாய்ப்புகளை பெறவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் ஒரு முக்கியமான அரசாணையை வெளியிட்டிருக்கிறார். அதில் என்ஐஒஎஸ் என்று சொல்லக்கூடிய தேசிய திறந்த நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்திருந்தால் அதற்கான சான்றிதழ் தமிழகத்தில் வழங்கப்படக்கூடிய சான்றிதழ்களுக்கு இணையானது கிடையாது, அது செல்லாது என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த உத்தரவானது தமிழகத்தில் அமல்படுத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறார். எனவே அரசு பணிகளுக்கும் அல்லது பதவி உயர்வு அல்லது உயர் கல்வி படிப்பினை கூட இந்த சான்றிதழ் அடிப்படையில் தமிழகத்தில் எங்கும் சேர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசாணை விவரங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.