பள்ளி மேலாண்மை குழு என்பது பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி ஏற்படுத்தப்பட்ட குழு ஆகும்.
குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மேலாண்மை குழு உறுப்பினர் ஆவர்கள்.