முன்னுரை
மக்கள் சமுதாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளவில் எழுந்திருக்கும் பிரச்னை போதை பழக்கும் ஆகும். வயது வித்தியாசமின்றி சமுதாயத்தில் போதைப்பழக்கம் வேரூன்றியுள்ளமை கவலைக்குரியதாகும். போதை பொருளை தடுக்கும் விதமாக பல சட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதனை முற்றாக ஒழித்து விட முடியாது, தடுக்கத்தான் முடியும். போதை பழக்கம் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களிடமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
போதை பழக்கம் ஏற்பட காரணங்கள்
பள்ளி பருவத்தில் நட்பு வட்டாரத்தினர் கொடுக்கும் அழுத்தம், வசிப்பிடச் சூழல், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரை பிரபலங்கள் போன்றவற்றை பார்த்து பழகுதல், சுயவிருப்பம், தற்காலிக மகிழ்ச்சி மற்றும் சிலரின் தவறான நட்பு போன்ற பல காரணங்களால் போதை பழக்கம் ஏற்படுகின்றன.
உலக போதை மருந்து ஒழிப்புகள் தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதை பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. மனித சமூகத்திற்கு போதை பொருள் பயன்பட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள்
உலக அளவில் தற்போது போதை பொருள் பயன்பாடு மிகவும் கடுமையான சுகாதார பிரச்னையாக மாறி உள்ளது. நாட்டில் நோய்களும், தற்கொலைகளும் போதை பொருட்கள் புழக்கத்தால் அதிகாித்துள்ளது. அதீத போதை பழக்கத்தால் மஞ்சள் காமாலை, வலிப்பு, விபத்து மற்றும் புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இதய நோய், பால்வினை நோய் போன்றவைகளுக்கு போதை வஸ்துக்களே முக்கிய காரணமாக உள்ளது.
போதை பழக்கத்தில் இருந்து எப்படி விடுபடுவது
போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு தன்னம்பிக்கையுடன் இருத்தல் வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயற்பாட்டால் தானாகவே அதிலிருந்து மீண்டுவிட முடியும். போதை பொருள் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் கவனத்தை திசை திருப்பி நல்ல செயல்களில் கவனத்தை செலுத்த வேண்டும். போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வதற்காக மருத்துவர்களை நாடி உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
முடிவுரை
குடிக்கும் மதுப்பிரியர்கள் என்றோ மது ஒழிந்திருக்கும். ஆனால் இன்றைய நவீன உலகில் பெரும்பாலனோர் ஏதேனும் ஒரு போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்பது கவலைக்குரியதாகும். உதாரணமாக, சமீபத்தில் தமிழகம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விச சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிாிழந்தது கொடூர மரணமாக கருதப்படுகிறது.