கோவை, கோவைப்புதூரில் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி துறைகள் இணைந்து கணினி்துறையில் உள்ள அறிவுத்திறன் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்குகாணொளிமூலம் நடத்தப்பட்டது.
இக்கருத்தரங்கினை இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர்.கே.சுந்தரராமன் முன்னிலையில், இக்கல்லூரியின் முதல்வர் எஸ்.பழனியம்மாள் கருத்தரங்க உரையாற்றினார். இதில் 234- க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை பல நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், தொழில் நிறுவனத்தினர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சமர்ப்பித்தனர். சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பிலிபைன்ஸ் பெர்பெட்ஸுவல் ஹெல்ப் சிஸ்டம் பல்கலைக்கழகத்தின் கணணித்துறையின் டீன் பாஸ்டர் ரெக்ளோஸ் ஆர்குவல்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். இதில் இவர் பேசியபோது, தொழிற்சாலைகளில் உள்ள தற்போதைய மாற்றத்தினை கல்வித் துறையில் பாடமாக மட்டும் இன்றி, ஆராய்ச்சிக்கும் உட்படுத்த வேண்டும். இளங்கலை படிக்கும் மாணவர்கள்கூட புதிய பொருட்களை உற்பத்தி செய்யும்படி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும். சமூகத்தின் பயன்பாட்டிற்கு மட்டும் ஆராய்ச்சியினை பயன்படுத்த வேண்டும். கிராமங்களுக்கு ஆய்வின் பலன் எளிதில் பயன்படுத்தும் நுட்பத்துடன் இருக்கவேண்டும். அனைத்து பாடத்திலும் ஆராய்ச்சியினை கொண்டுவாருங்கள். செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் மாபெரும் மாற்றத்தினை ஏற்படுத்திவருகிறது, இதன் மூலம் எதிர்பார்க்காத, நாம் ஆச்சிரியப்படும் படைப்புகள் எதிர்காலத்தில் வரவுள்ளது எனக்.கூறினார். மேலும் இதில் சிங்கப்பூர் தேசிய தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் சித்தல பிரசாத், ஈராக்கில் உள்ள குபாநஜல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஹமத் ஒபைட், மலேசியாவின் லின்கோலின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விவேகானந்தம் மற்றும் எகிப்து, பெனுசுஐப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஹமது இலங்கார் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினா். இக்கருத்தரங்கினை இக்கல்லூரியின் கணணிதுறைத் தலைவர்கள் முனைவர் கீதா, ஸ்ரீஜித் விக்னேஷ் மற்றும் சீமா தேவ் அக்சதா ஒருங்கிணைந்து நடத்தினார்கள். இக் கருத்தரங்கில் பேராசிரியர் திலகவதி வரவேற்புரை ஆற்றினார். முடிவில் பேராசிரியர் லட்சுமிதேவி நன்றியுரை கூறினார்.