You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

இன்றைய கல்வி தகவல் - கல்லாதோருக்கு பரிசு வழங்கி அசத்திய முதன்மை கல்வி அதிகாரி

|

தமிழகம் முழுவதும் கற்போர் எழுதுவோம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, இந்த திட்டத்தின் கீழ், பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் படிக்க எழுத தெரியாதோருக்கு (கல்லாதோர்) அடிப்படை கல்வியை கற்பித்து வருகின்றனர். இதன்மூலம் குறைந்தபட்சம் கல்வியை உறுதி செய்ய முடியும். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் கைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்படும் பயிற்சி மையத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி நேற்று ஆய்வு செய்தார். பின்னர், படிக்க தெரியாதவர்களை கரும்பலகையில் எழுத காட்ட சொன்னார். இதில் சிறப்பாக எழுதியவர்களுக்கு ரூ.100 ஊக்க தொகை வழங்கி அவர்களை பாராட்டினார். மேலும், முதன்மை கல்வி அதிகாரி அவர்களுக்கு அனைவருக்கும் நன்றி கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். முன்னதாக, அந்த மையத்தில் கும்மியாட்டம் அரங்கேற்றி, நாட்டுபுற பாட்டுகளை கல்லாதோர் பாடி அசத்தினர்.

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் வழங்கும் நடப்பாண்டிற்கான திட்டத்தை நேற்று சென்னையில் துவக்கிவைத்தார். இதன் மதிப்பீடு ரூ.214.79 கோடி. இதனை தொடர்ந்து மாவட்ட அளவில் பிளஸ் 1 மாணவ, மாணவிகள் விரைவில் சைக்கிள் பெற உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து, விசாரணை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணத்திற்காக மதிப்பெண் போடும் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழித்தவர் சூரப்பா.

நீட் தேர்வுக்கான ஒ.எம்.ஆர் விடைத்தாளில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதா என என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை விசாரித்து அறிக்கை தர வேண்டும் என ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த மனோஜ் என்பவர் இந்த வழக்கினை தொடர்ந்தார். இதில் என்டிஏ அக்டோபர் 5ல் வெளியிட்ட ஒஎம்ஆர் விடைத்தாளில் 700க்கு 594 மதிப்பெண் பெற்றதாகவும், அக்டோபர் 17ல் வெளியான ஓஎம்ஆர் விடைத்தாளில் 248 மதிப்பெண் குறைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். விசாரணை 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  

Read, Comment and Share. To receive education information promptly subscribe www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram/ ShareChat. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com.