எட்டு மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் இன்று திறக்கும் நிலையில் மாணவர்கள் சட்டத்தை மீறினால் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக மார்ச் முதல் தமிழகம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக இன்று முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்லூரிகளுக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும் ரூட் தல மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பொதுமக்கள் மற்றும் பயனிகளுக்கு இடையூறாக ஆட்டம் பாட்டத்தில் ஈடுபவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடந்தாண்டு கூட பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடைேய நடந்த ரூட் தல மோதலில், பூந்தமல்லி நெடுஞ்சாலை மாநகர பேருந்தில் ஒருவர் ஒருவரை கத்தியால் வெட்டிக்கொண்டனர். காவல்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்ைக எடுத்து வந்தாலும் கூட, இந்த பிரச்னை தொடர்கிறது. கல்லூரிகள் இன்று திறக்கப்படும் நிலையில், ரூட் தல பிரச்னை நடைப்பெற வாய்ப்பு உள்ளதால், உளவுத்துறை போலீசார் மாநகர காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, சென்னை மாநகரம் முழுவதும் 12 இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சட்டத்தை மீறும் மாணவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். பள்ளி கல்வி முதல் கல்லூரி கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என முதல்வருக்கு மு.க ஸ்டாலின் எச்சரித்துள்ளார். அரசு மீது ஏதேனும் புகார் கூற வேண்டும் என்பதற்காகவே அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசன் உண்மை நிலையை அறிந்து கொள்ளாமல் பேசி வருகிறார் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தர்மபுரியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். கற்போர் கல்வி மையங்களில் திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடியிருப்பு பகுதிகளில் புதிதாக தொடக்க, நடுநிலைப்பள்ளி தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல் தயாரித்து அனுப்ப வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் அம்மாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சிறந்த பெற்றோர் ஆசிரியர் கழகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு வழங்க வேண்டிய இலவச சைக்கிள் பராமாிப்பின்றி கிடக்கிறது. வேலை இல்லாத விரக்தியில் கரூர் ராயனூர் வீனஸ் நகரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பரணிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த சில மாதங்களாக வேலை இல்லாமல் தவித்து வந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட பார்வைதிறன் குறைபாடு உடையோர் அரசு நடுநிலைப்பள்ளியில் கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு வரும் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ பொது தேர்வை மே மாதம் வரை தள்ளி வைக்க வேண்டும் என ரமேஷ் பொக்ரியாலுக்கு ட்விட்டர் மூலம் மாணவர்கள கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் நல பள்ளிகளில் 198 ஆசிரியர் காலிபணயிடங்கள் உள்ளதாகவும், அதனை 13 மாவட்ட ஆட்சியர்கள் தொகுப்பூதிய முறையில் நிரப்ப வேண்டும் என பழங்குடியினர் மாநில இயக்குனர் வி.சி.ராகுல் அறிவுறுத்தியுள்ளார். தமிழக பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட வேண்டிய செமஸ்டர் தேர்வை ஆன்லைன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. Read, Comment and Share. To receive education information promptly subscribe www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram/Sharechat. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com