You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

இன்றைய கல்வி தகவலில் - ஆன்லைன் வகுப்பால் மாணவி தற்கொலை

இன்றைய கல்வி தகவலில் - ஆன்லைன் வகுப்பால் மாணவி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பெருமாள் மலை அடுத்த அடுக்கம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனாவால், ஆன்லையில் பாடங்கள் நடந்துவரும் நிலையில், கடந்த 1ம் தேதி நடந்த வகுப்பை கவனிக்காமல் இருந்துள்ளார். இதை அவரது தந்தை கண்டித்துள்ளார். மனமுடைந்த சித்ரா வீட்டில் இருந்த டிஞ்சர் மருந்தை குடித்து மயங்கினர். மேல்சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாணவி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

எட்டு மாதத்திற்கு பின் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்றுதுவங்கின. இருந்தபோதிலும், குறைந்த அளவிலான மாணவர்கள் வகுப்புக்கு வந்தனர்.

சூரப்பா தொடர்பான ஆவணம் ஒப்படைக்காத அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆஜராக வேண்டும் என தமிழக அரசு நியமித்துள்ள ஒய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சூரப்பா மீது பல்வேறு புகார் உள்ளது எனக்கூறி தமிழக அரசு விசாரணை ஆணையம் நியமித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முதுகலை ஆசிரியர் மதிவாணன், கடந்த 2017ம் ஆண்டு, குரோம்பேட்டை அருகே தனது இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த போது, பின் வந்த இருசக்கரம் வாகனம் அவர் மீது மோதியதில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். தனது கணவரின் இறப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அவரது மனைவி முத்தரசி சென்னை மோட்டார் வாகன விபத்தில் இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அவருக்கு இழப்பீடாக ரூ 27.63 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்வள அறிவியல், பொறியியல் கல்வி நிறுவனங்கள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மாணவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சிங்கம்புணரியில் அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

12 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கலில் நடந்த காணொலி கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

2019ம் ஆண்டிற்கான, இந்திய வேளாண் தரவரிசையில் பட்டியலில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 33வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கோவை மாவட்டம் சார்பில் தொழிற்கல்வி பயிற்றுநர்களுக்கான10 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி கோவை கிணத்துக்கடவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நேற்று துவங்கியது. இதில் தொழிற்கல்வி பயிற்சி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

கட்டணத்ைத குறைக்ககோரி, ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அதன் வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.

கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து அட்டையை பயன்படுத்தலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம்கோரி, பகுநி நேர ஆசிரியர்கள் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.

வரும் 14ம் தேதி செமஸ்டர் தேர்வுகள், அட்டவணைப தயாரிப்பு பணி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பல்லைக்கழகத்தின் கீழ், 156 கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்கள் உள்ளன மற்றும் 1.50 லட்சம் பேர் படிக்கின்றனர்.

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி வெற்றிபெற்றதில், புதுக்கோட்டை மாவட்டம் இரண்டாம் இடத்ைத பிடித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

விடுதி கட்டணம் செலுத்தாதால், அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல் நாளிலேயே உள்ளே அனுமதிக்கமால் வாசலில் தடுத்த நிறுத்தப்பட்டதால், நெல்லை மாவட்டத்தில் பரப்பு ஏற்பட்டது. 25 மாணவர்கள் தங்கள் உடைமைகளுடன் ரோட்டில் காத்திருந்த அவலம் அரங்கேறியது. பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு, அவர்கள் நிபந்தனையுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உதயசூரியன் வீட்டில், உள்ளே மற்றொரு திருடன் இருக்கிறான் பிடியுங்கள் என திசை திருப்பில, ரூ.1.50 லட்சம் மர்ம ஆசாமி திருடிச் சென்றுள்ளார். போலீசார் சிசிடிவி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Read, Comment and Share. To receive education information promptly subscribe www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram/Sharechat. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com