சிபிஎஸ்இ தேர்வுகள், நீட், ஜெஇஇ உள்ளிட்ட தேர்வுகள் வழக்கம்போல நடைபெற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எந்த தேர்வும் தள்ளி போக வாய்ப்பில்லை என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை எனவும், பள்ளி திறப்பதற்கான முடிவை முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்வோம் என பள்ளி கல்வி அமைச்சர் நேற்று சென்னையில் தொிவித்தார். பாரதியாரின் பாடல்களை அனைவரும் படிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வட்டார கல்வி இடமாற்ற பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பழமையான கட்டிடம் என்பதால், பணிப்பதிவேடு, ஊதிய ஆவணங்கள், சேமநலநிதி கணக்குகள் உள்ளிட்ட ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட அனைத்து கோப்புகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் 17ம் தேதி நடக்கும் பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்ைகயா நாயுடு பங்கேற்கிறார். 7.5 சதவீத இடஒதுக்கீடு காரணமாக, நீட் பயிற்சியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்தாண்டு 389 பேர் சேர்ந்த நிலையில், நடப்பாண்டில் 850 பேர் நீட் பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read, Comment, and Share. To receive education information promptly subscribe to www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram/ ShareChat. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com.