நீட் மதிப்பெண் மோசடி:
நீட் தேர்வில் பெற்ற 27 மதிப்பெண்ணில் மோசடி செய்து அதை 610 மதிப்பெண்களாக திருத்தி மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற மாணவி மற்றும் அவரது தந்தையான பல் டாக்டர் பாலச்சந்திரன் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடந்த போது, மருத்துவ கல்வி இயக்ககத்தின் மருத்துவ மாணவ சேர்க்கை குழுவினர் ஆய்வு செய்தனர். கடந்த மாதம் 7ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி திவ்யா (பெயர் மாற்றம்) வழங்கிய சான்றிதழ்களில் நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வேறு ஒரு மாணவியின் மதிப்பெண் சான்றிதழுடன் ஒத்துபோனதாக கண்டுபிடிக்கப்பட்டது. உடனை அதிகாரிகள் மேலும் சான்றிதழை ஆய்வு செய்தபோது, மாணவி அளித்த நீட் தேர்வு சான்றிதழ் போலியானது என உறுதியானது. நீட் தேர்வில் சம்மந்தப்பட்ட மாணவி வெறும் 27 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். பரமக்குடியில் உள்ள ஓரு பிரவுசிங் சென்டரில் நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் ெபற்ற மற்றொரு மாணவி நீட் தேர்வு சான்றிதழ் உடன் மருத்துவ கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். இதை அறிந்த, மாணவியின் தந்தையான பல் டாக்டர் பாலச்சந்திரன் தொிந்துகொண்டு பிரவுசிங் சென்டர் உரிமையாளர் உதவியுடன் ஏற்கனவே ஆன்லைனின் விண்ணப்பித்த மாணவியின் நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை எடுத்து, அதை கணினியில் பதிவேற்றம் செய்து, திவ்யாவின் புகைப்படம் மற்றும் பெயரை, முகவரியை மாற்றி போலியாக நீட் தேர்வு மதிப்பெண்கள் சான்றிதழ் தயாரித்து, கலந்தாய்வில் சமர்ப்பித்து, வசமாக சிக்கியுள்ளனர்.