கல்லூரி அடையாள அட்டை இருந்தால், மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, “அரசு கல்லூரி இளநிலை இறுதியாண்டு மாணவர்கள் இந்த கல்வியாண்டிற்கான புதிய இலவச பயண அட்டை அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குவதில் உள்ள கால அளவு போன்றவற்றை கருத்தில் கொண்டு 2020-21 கல்வியாண்டில் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை இலவசமாக மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், தாம் பயின்று வரும் கல்லூரிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்ைடயை கொண்டு தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்லூரி வரை பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.”
சென்னை சேர்ந்த கல்லூரி மாணவன் சீனி, வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கல்லூரியில் இராண்டாவது ஆண்டு படித்து வரும் நிலையில், ஆன்லைன் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு பணத்துடன் கல்லூரிக்கு நேற்று சென்றார். 7ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்ததால், தற்போது கட்டணம் செலுத்த முடியாது என ஊழியர்கள் தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த சீனி, பிளேடை எடுத்து தனது இடது கையில் சரமாரியாக கீரிக்கொண்டார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், போலீசார் விசாரிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் சேர்ந்த அரசு பள்ளி மாணவன் நேற்று இரவு அரியாகுறிச்சி கிராமத்தில் உள்ள கண்மாயில் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கொல்லங்குடி அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். 15 அம்ச கோரிக்கை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியினர் மூன்று கட்ட போராட்டம் நடத்துவது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதானமாக, ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 17(ஆ) நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தது. கோவை மாவட்டத்தில் 15க்கும் குறைவாக படிக்கும் 121 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக வால்பாறையில் 33 பள்ளிகளும், அன்னூர் ஒன்றியத்தில் 16 பள்ளிகளும் கண்டறியப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், பள்ளிகள் மூட வாய்ப்பு உள்ளதாக பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக, தஞ்சை சரபோஜி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வங்கி அலுவலர் பணிக்கான முதல்நிலை தேர்வுக்கான இலவச இணைய வழி பயிற்சி வகுப்புகள் தெடங்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9360557145. திருச்சி புள்ளம்பாடி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில், பி.எட் மாணவர்கள் பயிற்சி பெற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது இது தலைமை ஆசிரியர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டப்படிப்புகள் வேலைவாயப்பு பயிற்சியுடன் இணைந்த பட்டபடிப்புகளை வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது. கல்வி உரிமை சட்ட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணமாக, கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையே வழங்கக் கோரிய மனுவுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ேபாஸ்ட் மெட்ரிக்குலேஷன் கல்வி உதவித்தொகை திட்டத்தை கைவிடக்கூடாது என இந்திய கம்யூனீஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். Read, Comment and Share. To receive education information promptly subscribe www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram/ Sharechat. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com.