திருச்சி மணப்பாறை அருகே கொட்டகை பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியின் 15 அடி உயரம் கொண்ட சுற்றுசுவர் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில், வலுவில்லாமல் சுவர் அருகில் இருந்த கூலி தொழிலாளி செல்வகுமார் என்பவரது வீட்டின் மேல் விழுந்ததில் கூலி தொழிலாளி செல்வகுமார் உயிரிழந்தார். கட்டிட இடிபாடுகளில் மீட்கப்பட்ட அவரது மனைவி மற்றும் அவரது ஐந்து குழந்தைகள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொறியியல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதால், டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஊரக வளர்ச்சி துறையின் நடவடிக்கையால் சர்ச்சை. டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு, 20 சதவீத இடஒதுக்கீடு சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் நேற்று வழங்கினார். அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்துவது நியாயமில்லை என தமிழக முதல்வருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடிதம் எழுதியுள்ளார். பத்தாம் வகுப்பு துணைதேர்வு எழுதி விண்ணப்பித்தவர்களுக்கான மறுகூட்டல் முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறை 18 முதன்மை கல்வி அதிகாரிகளை பணியிட இடமாறுதல் வழங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் ஒய்வுபெற்ற நீதிபதி கலையரசன் ஆணையம் முன்பு பதிவாளர் கருணாமூர்த்தி நேரில் ஆஜராகி ஆவணங்களை வழங்கினார். அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கோரி வழக்கு அரசு பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், நடப்பு கல்வியாண்டில், புதிதாக அரசு பள்ளியில் சேர்ந்த 5.18 லட்சம் மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். கிருஷ்ணகரி மாவட்டத்தில் உள்ள தளி ஒன்றியத்தில் உள்ள மலை கிராமங்களில் 27 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்க முதன்மை கல்வி அலுவலர் முருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 லட்சம் மதிப்பில் தொழில்நுட்ப ஆய்வகம் மாணவிகள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது. Read, Comment and Share. To receive education information promptly subscribe www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram/ Sharechat. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com.