You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

இன்றைய கல்வி தகவலில் -நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய தனியார் பள்ளிகள்

|

TN Education Info : 8.00 am

கொரோனா கால கட்டத்தில் சென்னைஉயா் நீதிமன்றம் 40 சதவீதம் கல்வி கட்டணமே பெற வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்திய நிலையில், நீதிமன்றம் உத்தரவு மீறி, பல பள்ளிகள் 40 சதவீதற்கும் மேலாகவே கூடுதல் கட்டணம் செய்தது, பெயரளவில் கல்வித்துறை மாவட்ட அளவில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்த பள்ளிகள் பட்டியலை சேகரித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு வழங்கியிருந்தது.

இதில் ஒன்பது பள்ளிகள் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. அப்பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை எனவும், நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி கட்டணம் வசூலிக்கப்படும் உறுதியளித்தது. இதனை பதிவு செய்த நீதிமன்றம், அப்பள்ளிகள் மீதான வழக்கை முடித்து வைத்தது. மேலும் கோவை வடவள்ளி மற்றும் கெருகம்பாக்கத்தை சேர்ந்த சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் சாா்பில் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் இரண்டு பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பை வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். வழக்கு தொடர்பாக, இரு பள்ளிகளுக்கும் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை சனவரி 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

சட்ட படிப்புக்கான அரியர் கால அட்டவணையை குறித்து சட்ட பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் நேற்று 43 பேர் பங்ககேற்றனர்.

கோவை மாவட்ட அளவில் நடந்த கலா உத்சவ் போட்டியில் 18 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

பொள்ளாச்சி 33வது வாா்டில், 9 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டடம் கட்ட பூமி பூஜை நடந்தது.

ஆன்லைன் கல்வியில் அசத்தல்

நெல்லை காரையாறு பகுதி, முண்டந்துறை புலிகள் காப்பக அடர் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு செல்போன் டவர் அமைக்க அனுமதி இல்லை. இதனால் காரையாறு மற்றும் வி.கே புரம் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12வது வகுப்பு பயிலும் காணிக்குடியிருப்பு பழங்குடியின மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், காரையாறு மயிலாறு காணிக்குடியிருப்பின் பின் பகுதியில் தரைமட்டத்திலிருந்து சுமார் 30 அடி உயரமுள்ள சொங்க மொட்டை மலை உச்சியில் செல்போன் டவர் கிடைப்பதை அறிந்த அவர்கள், அந்த இடத்தில் வெயில், மழையிலிருந்து தற்காத்து கொள்ள கொட்டகை அமைத்து ஆன்லைன் வகுப்பில் பாடம் கற்று வருகின்றனர். தற்போது, இந்த முகாமில் ஏழு பேர் படித்து வருகின்றனர்.

குளித்தலை அய்யர் மலையில் உள்ள அரசு கலை கல்வி நிறுவனத்தில் தமிழ்நாடு திறந்தநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு 94429 59222.

தளி ஒன்றியம் மதகொண்டபள்ளி நமது மாதா தொடக்கப்பள்ளிக்கு மாணவகளின் நலன் கருதி ரூ.87 ஆயிரம் மதிப்பிலான 15 பெஞ்ச்,டெஸ்குகள் ஐவிடிபி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

வந்தவாசி ஏரி அருகே செல்பி எடுக்க முயன்ற பிளஸ்2 மாணவி நீரில் மூழ்கி பலி.