Increase ITK Volunteers Salary | இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஊதியம் உயர்த்த கோரிக்கை
Increase ITK Volunteers Salary
இல்லம் தேடி கல்வி திட்ட கோவை மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் க. லெனின்பாரதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கொரானா பொது முடக்க காலத்தில் 19 மாத காலம் பள்ளிகள் முற்றிலும் முடங்கிய நிலையில் மிகப்பெரிய அளவில் குழந்தைகளிடையே கற்றல் குறைபாடு/ கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். இதை சரி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக " இல்லம் தேடி கல்வி "எனும் முன்னோடி திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
கடந்த ஒன்னரை ஆண்டுகளுக்கு மேலாக கிட்டத்தட்ட இரண்டு லட்சம் தன்னார்வலர்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. இதன் மூலம் 19 மாத கால கற்றல் இழப்பு ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது. அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்னார்வலர்கள் இன்றும் மாலை நேரங்களில் குழந்தைகளின் கல்விக்காக தனது நேரத்தையும், உழைப்பையும் செலுத்தி வருகின்றனர்.
Read Also: இல்லம் தேடி கல்வி திட்டம் தொடரும்
வீட்டில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் ஏற்ற சூழல் வாய்க்கப்பெறாத குழந்தைகளுக்கு இல்லம் தேடிக் கல்வித்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாலை நேரங்களில் தமிழகத்தின் வீதிகள் உயிர் பெறுகின்றன குழந்தைகளாலும் தன்னார்வலர்களாலும். வெறும் கற்றல் கற்பித்தல் மட்டுமல்ல மறந்து போன விளையாட்டுகளை, கலைகளை, நாடக வடிவங்களை மீட்டெடுக்கும் பணியில் "இல்லம் தேடி கல்வி " திட்டம் முனைப்பு காட்டுகிறது.
பள்ளி எனும் நிறுவனத்தின் செயலிழப்பு என்பது வரலாறு காணாத இழப்புகளை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அதேநேரம் எந்த ஒரு இழப்பையும் நம்மால் மீட்டெடுக்க இயலும் என்பதை தன்னார்வலர்களின் நேரவளமும், மனிதவளமும் ஈடு செய்யப்பட்டு கற்றல் இழப்பை மீட்டெடுத்து உள்ளனர் . இத்திட்டம் முடியும் வரை தன்னார்வலர்களுக்கு தமிழ்நாடு அரசு தரும் ஊக்கத்தொகையை ரூ 1000 இல் இருந்து ரூ. 2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-