இல்லம் தேடிக் கல்வி திட்டம் கோவை மாவட்டத்தில் 1,049 மையங்களில் ஜனவரி 3ம் தேதி துவங்கியது.
கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் இடைவெளி ஏற்பட்டது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில், மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
READ ALSO: Illam Thedi Kalvi Thittam Full Details Here With PDF 2021
முதற்கட்டமாக, 12 மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் இதற்கான ஆயத்த பணிகள் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அறிவியல் இயக்கம் மற்றும் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் மூலம் செய்யப்பட்டது.
மேலும், 1,049 தன்னார்வலர்கள் பல்வேறு திறன்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இவர்கள் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒதுக்கப்பட்ட மையங்களில் பாடம் நடத்த உள்ளனர். 20 மாணவர்களுக்கு, ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ந.கீதா ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மருதூர் குடியிருப்பில் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதில் கல்வி அதிகாரிகள், ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.