பள்ளி கல்வித்துறையின் "இல்லம் தேடி கல்வி திட்டத்தின்" கையேடுகள் Illam Thedi Kalvi Thittam Guide PDF வடிவில் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோன தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, திமுக அரசு பொறுப்பு ஏற்றவுடன், சுமார் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்து இல்லம் தேதி கல்வி திட்டத்தை செயல்படுத்தி, தற்போது மாவட்டம் வாரியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் முழு கட்டுரை படிக்க - https://tneducationinfo.com/illam-thedi-kalvi-thittam-full-details-here-with-pdf-2021/
இதன் நோக்கம், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை தகுதிவாய்ந்த தன்னார்வலர்கள் மூலமாக மாலை நேர வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பித்து கற்றல் இடைவெளியை பூர்த்தி செய்வதே ஆகும். தற்போது தன்னார்வலர்கள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கையேடுகள் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பதவிறக்கம் செய்யலாம். மறக்காமல் அனைவருக்கும் பகிருங்க..
illam Thedi Kalvi Thittam Guide 1 to 5 - PDF
illam Thedi Kalvi Thittam Guide 6 to 8 - PDF