Also Read: Illam Thedi Kalvi Thittam Guide PDF Download 2021
கடந்த கல்வியாண்டில் கொரோனா தொற்று பரவல் இருந்ததால், அரசு பள்ளி மாணவர்களின் வீட்டுக்கே சென்று டியூசன் எடுக்கும் திட்டம் அறிமுகமானது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான, இரண்டு லட்சம் தன்னார்வ ஆசிரியர்கள் மாதம் ரூ1000 ஆயிரம் ஊக்கத்தொகையில் நியமிக்கப்பட்டனர். அதேபோல், திட்டத்தை விளம்பரம் செய்ய, கலைக்ககுழுக்களும் நியமிக்கப்பட்டன. இந்தநிலையில், கடந்த கல்வி ஆண்டில் இயல்பு நிலை திரும்பி, பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும், இந்த திட்டம் நீடிப்பதாக கூறி, அரசு தரப்பில் ரூ.200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், டியூசன் எடுப்பது உள்பட, திட்ட பணிகள் ஏதும் நடப்பதாக தெரியவில்லை. இதற்கிடையில், தன்னார்வ ஆசிரியர்களுக்கு தினமும் ரூ.500 சம்பளத்தில் புதிய பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலர்கள், அரசு பள்ளியில் உள்ள நூலக புத்தகங்களை தூசி தட்டி சுத்தம் செய்து, அடுக்க வேண்டும். இதற்கு பள்ளி சார்பில் அவர்களுக்கு தினமும் 500 ரூபாய் சம்பளம் தர வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்போில், இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு நிதி மட்டும் ஒதுக்கப்பட்டு, அதன் பணிகள் நின்று போனது தெரியவந்துள்ளது. இதனால் சும்மா இருக்கும் தன்னார்வலர்கள் கூடுதல் சம்பளத்துடன் வேறு பணி வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி கூறுகிறது. இன்றும் பல தன்னார்வலர்கள் தங்களது மாத ஊக்கத்தொகை பெறாமல் சுயநலம் பாராமல், பணியாற்றும் வரும் நிலையில், தினமலர் இந்த செய்தி என்று பெயாில் வன்மத்தை கக்கியுள்ளது.