Ilam Thedi Kalvi Short Film | இல்லம் தேடி கல்வி குறும்படம் போட்டி
Ilam Thedi Kalvi Short Film
மாவட்ட அளவில் நடந்த இல்லம் தேடி கல்வி குறும்பட போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடித்த தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் கூட வழங்கததால், தன்னார்வலர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
தொடக்க பள்ளி மாணவர்களின் சிந்தனையை ஊக்குவிக்கவும், அவர்களது திறமையை வெளிக்கொணரவும் பள்ளி கல்வித்துறை சார்பில் சமீபத்தில் இல்லம் தேடி கல்வி குறும்பட போட்டி திருவிழா மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, சுகாதாரம், கல்வி, நம்ம ஊர் உள்ளிட்ட ஐந்து தலைப்பின் கீழ் 3 நிமிடங்களுக்குள் குறும்படம் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
Read Also: நான் முதல்வன் குறும்படம் போட்டி
அதன்படி பல தன்னார்வலர்கள் எவ்வித எதிர்பார்ப்பின்றி ஆர்வத்துடன் குறும்படத்திற்கு கதை எழுதி, திரைக்கதை வடிவமைத்து, கையில் வைத்திருந்த சாதாரண ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் மாணவர்களை சிறப்பாக நடிக்க வைத்து, அதனை படமாக பிடித்து, அதனை அதே போனில் எடிட்டிங் செய்து, ஒரு சமூக கதையுடன் குறும்படமாக கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர். பெரும்பாலான தன்னார்வலர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, தொடக்க நிலை பள்ளி பிரிவில் மூன்று இடங்கள், நடுநிலை பள்ளி பிரிவில் மூன்று இடம் என மாவட்ட அளவில் ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் மூன்று சிறந்த குறும்பட போட்டி தேர்வு செய்யப்பட்டது.
ஆனால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு சிறிய அளவிலான பாராட்டு சான்றிதழோ அல்லது பரிசுகளை அல்லது ஊக்கத்தொகையே வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல இடர்பாடுகள் மத்தியில் குறும்படங்களை இயக்கிய தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தக்கூட அதிகாரிகள் முன்வரவில்லை என்பது பல தன்னார்வலர்களை விரக்தியடைய செய்துள்ளது. மேலும் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும், அவர்கள் குறும்பட போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.