Ilam Thedi Kalvi Seeman press meet | இல்லம் தேடி கல்வியை வெளுத்துவாங்கிய சீமான்
Ilam Thedi Kalvi Seeman press meet
மாணவர்கள் கல்வி நலன் கருத்தில் கொண்டு, கொரோனா காலத்தில் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இல்லம் தேடி கல்வியை பல கேள்விகளை கேட்டு செய்தியாளர் சந்திப்பை அலறவிட்டார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட கேள்விகளை அவரிடம் முன்வைத்தார்.
அப்போது, அவர் இல்லம் தேடி கல்வி பாடத்திட்டம் என்ன?, இல்லம் தேடி கல்வியின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு தே்ாவு இருக்கா?, தேர்ச்சி பெற்றால் மதிப்பெண் இருக்கா? மதிப்பெண் இருந்தால் அதற்கு மதிப்பு இருக்கா?, இல்லம் தேடி கல்வி திட்டத்தின் ஆசிரியர்களின் கல்வி தகுதி என்ன? என பல கேள்விகளை கேட்டு செய்தியாளர்கள் சந்திப்பை அலறவிட்டார்.
மேலும் அவர் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடினார், அதாவது ஏற்கனவே பல பட்டதாரிகள் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர் பணி வழங்காமல் வீட்டிலேயே முடக்கி வைத்திருப்பதாக அதிருப்தி தெரிவித்தார். ஆசிரியர் பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், இல்லம் தேடி கல்வியால் பள்ளிகளை எல்லாம் மூடிவிடுவாங்களா… இதெல்லாம் பையத்திகாரா்களின் வேலை என செய்தியாளர் சந்திப்பில் அவர் ஆவேசப்பட்டார்.
மேலும் அவர் இல்லம் தேடி கல்வி, நீட் தேர்வு, இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்டவை குறித்து அவருடன் விவாதம் நடத்த தயாரா என சவால்விட்டார்.