இல்லம் தேடி கல்வி அலுவலர் சிறப்பு பணி அலுவலர் (மு.கூ.பொ) இளம்பகவத் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
கரோனா காலத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக ெதாடங்கப்பட்ட இல்லம் தேடி கல்வித்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இத்திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும், வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் செயல்பட்டு வருகின்றனர். இத்திட்ட பணிகளை மேற்கொள்ளும் மாவட்டம் / வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் அவர்கள் பணியாற்றிய பள்ளிகளில் தற்காலிக ஆசிாியர்கள் தேவைப்படும்பட்சத்தில் பள்ளி மேலாண்மை குழு மூலமாக நியமிக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி பணிகளை மேற்கொள்ளும் மாவட்டம்/ வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில் உரிய காரணத்துடன் அத்தகவல்களை எழுத்து பூர்வமாக மாநில அலுவலகத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும். அவ்விடத்தில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் நன்கு ஈடுபாடுள்ள ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு, புதிய ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு இல்லம் தேடி கல்வி பணியில் ஆசிரியர்களை மாவட்ட/வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் அல்லது விடுப்பு செய்வதற்கான ஆணை உாிய வழியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்தே மட்டுமே பிறக்கப்பட வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இவ்நடைமுறையை பின்பற்ற வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.