You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

இல்லம் தேடி கல்வி திட்டம் மையங்கள் குறைக்க வாய்ப்பு

Ilam Thedi Kalvi latest news

இல்லம் தேடி கல்வித்திட்டத்தை ரூ100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பிறக்கப்பட்டுள்ளது. 

பள்ளி கல்வித்துறை செயலர் ஜெ குமரகுருபரன் பிறப்பித்த அரசாணை, தமிழகத்தில் கரோனா காலகட்டத்தில்1 முதல் 8ஆம் வகுப்பு வரையான மாணவர்கள் இடையே கற்றல் இடைவெளியை சரிசெய்ய பள்ளி கல்வித்துறை இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. இதற்காக அப்போது ரூ 199 கோடியே 96 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 

அந்த திட்டத்தை திட்டமிடுவதற்கு செயல்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் மாநில, மாவட்டம், தொகுதி அளவில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டமானது தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2021 ஆம் ஆண்டு நவம்பரில் ரூ 50 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ173.31 கோடியும், 2023 மார்ச் மாதம் ரூ 52.85 கோடியும் செப்டம்பர் மாதம் ரூ 100 கோடியும் ஒதுக்கப்பட்டது. 

மையங்கள் குறைக்கப்படும்

இந்த நிலையில், 2024-2025ஆம் ஆண்டுக்காள இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான மையங்கள் 1.80 லட்சத்தில் இருந்து 1.12 லட்சமாக குறைக்கப்பட உள்ளது. அத்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ 191 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இல்லம் தேடி கல்வியின் சிறப்பு அதிகாரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். அதை கவனமாக ஆராய்ந்து இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ 100 கோடி நிதியானது ஒதுக்கி ஆணையிடப்படுகிறது. மேலும் கற்றல் இழப்புகளை சரி செய்ய கொண்டுவரப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கம் வெற்றி அடைந்ததன் காரணமாக 2024-2025 ஆம் ஆண்டில் இதற்கான மையங்களும் தேவைக்கேற்ப குறைக்கப்படும்  என அதில் கூறப்பட்டுள்ளது.