BREAKING UPDATE
சற்று முன் : தமிழக அரசு, நவம்பர் 1ம் தேதி முதல் தொடக்க, நடுநிலைப்பள்ளி திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், மருத்துவர், நிபுணர் குழு அடிப்படையில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Exclusive - தொடக்க, நடுநிலைப்பள்ளி பள்ளி திறக்கம் காரணம் என்ன?
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி, நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டமாக தொடக்கப்பள்ளிகளை திறக்கலாம் என்று ஐசிஎம்ஆர் நிபுணர்குழு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலை மத்தியில், நாடு முழுவதும் பல மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன.
பல்வேறு கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வரும் நிலையில், இன்னும் தொடக்கப்பள்ளி திறக்க எந்த அரசும் முன்வரவில்லை. இந்த பள்ளிகளை திறப்பது குறித்து, மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில்,
இந்தியன் ஜர்னல் ஆப் மெடிக்கல் ரிசர்ச் என்ற இதழில் வெளியான கட்டுரையில், யுனெஸ்கோ அறிக்கையின்படி, கொரோனா கட்டுப்பாடு அமலுக்கு வந்த பிறகு கிட்டதட்ட 500 நாட்களுக்கு மேலாக 3.20 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. அதனால், கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க பள்ளிகளை திறக்கும் முடிவில், மற்ற வெளிநாடுகளில் பின்பற்றப்படும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் மீண்டும் பள்ளிகை திறக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிபுணர்கள் தாணு ஆனந்த், பல்ராம் பார்கவா, சமீரன் பாண்டா ஆகியோரின் கூற்றுப்படி கொரோனா காலம் முடிந்தவுடன் பள்ளிகள் திறப்பதே சிறந்தது.
அதேநேரம், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
ஆரம்ப பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கையை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தொடங்கலாம். ஒவ்வொரு கட்டமாக ஆரம்ப பள்ளிகளை திறக்கலாம்.
அதேநேரம் நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். வைரஸ் பரவுவதை அறிய, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக கொரோனா பரிசோதனைக்கு பரிந்துரைப்பதே சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.