திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மர்மநபர்கள் மனித மலத்தை வீசிச்சென்றது கல்வித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாைளயம் அரசு உயர்நிலை பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சில சமூக விரோதிகள் பள்ளியில் புகுந்து மனித மலத்தை பத்தாம் வகுப்பு அறையில் வீசி சென்றுள்ளனர். இன்று காலை இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து, பள்ளி ஆசிரியர்கள் தகவல் கூறியுள்ளனர். இதையடுத்து காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை தீவிர நடத்தி வருகின்றனர்.குறிப்பாக பள்ளி அருேக போதிய மின் விளக்குகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கு பின்புறம் காடு உள்ளதால், சமூக விரோதிகள் பள்ளியை மதுகுடிக்கும் பார் ஆக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சுவரில் ஆபாச வார்த்தைகளை எழுதுவது, பள்ளி பொருட்களை சேதப்படுத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், சமூக விரோதிகள் நேற்று மனித மலத்தை நேற்று வீசியுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வெளியே அமர வைக்கப்பட்டனர். மேலும் பள்ளி வகுப்பறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பள்ளிக்கு இரவு காவலர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.