How to Select College Course in Tamil | எப்படி கல்லூரி படிப்பை தேர்வு செய்வது
How to Select College Course in Tamil
இளநிலை பட்டப்படிப்புகளில் விருப்பமான துறைகளை தேர்ந்தெடுத்தால் சுலபமான வெற்றியை பெறலாம். ஆனால் சில விஷயங்களை முன்கூட்டியே சிந்திப்பது நல்லது.
- இளங்கலை படிப்பை எப்படி தேர்வு செய்வது
- உங்களுக்கு பிடித்த ஆர்வமுள்ள துறை எது?
- தொழில்படிப்பா அல்லது தொழில் சாரா படிப்பா?
- சேர விரும்பும் படிப்பின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
- என்னென்ன மாதிாியான வாய்ப்புகள் உள்ளன?
- கலந்தாய்வு மூலம் சேர்க்கையா அல்லது தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா?
- படித்து முடித்தவுடன் வேலையா அல்லது உயர்கல்வியா?
- கல்விக்கான கட்டணம் எவ்வளவு?
- கல்லூரி படிப்பை முடிப்பதற்கு எவ்வளவு செலவாகும்?
- வேலை வாய்ப்பு பெற சான்றிதழ் படிப்புகள் உள்ளனவா?
- விண்ணப்பித்த உடன் கல்லூரியில் இடம் கிடைக்குமா அல்லது போட்டிகள் உள்ளதா?
- உதவித்தொகை கிடைக்குமா, கல்வி கட்டணத்தில் சலுகை உண்டா?
மேற்கண்ட கேள்விகளுக்கு தெளிவான பதிலுடன் கல்லூரியைத் தேட ஆரம்பிப்பது நல்லது
பொறியியல், மருத்துவம், பாராமெடிக்கல், சட்டம், மேலாண்மை, பேஷன் ஆர்க்கிடெக்சர், கலை அறிவியல் படிப்புகள், வடிவமைப்பு, இதழியில் திரைப்பட துறைக்கு செல்வதற்கான ஏராளமான படிப்புகளும் உள்ளன.
Read Also: சிறந்த கல்லூரி தேர்வு செய்வது எப்படி
சுயமுடிவு தேவை
சுற்றத்தினர், பெற்றோர் மற்றும் நண்பர்கள் வற்புறுத்தலால் எந்த படிப்பும் தேர்வு செய்ய வேண்டாம். நீங்கள் உங்களுடைய பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து சரியான படிப்பை தேர்வு செய்ய வேண்டும்.
உயர்கல்வி வாய்ப்புகள்
பிளஸ் 2 வகுப்பில் பொதுவாக நான்கு பிரிவுகளில் மாணவர்கள் படித்திருப்பார்கள்.
- கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணினி அறிவியல்
- கணித பாடத்திற்கு பதிலாக, தாவரவியல், மற்றும் விலங்கியல் பாடப்பிாிவுகள்
- கணக்கு பதிவியல், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு பாடங்களை கொண்ட பிரிவுகள்
- தொழிற்படிப்புகள் (வொகேஷனல் கோர்ஸ்) எடுத்து படிப்பவர்கள்
மேற்கண்ட பிரிவுகளின் அடிப்படையிலேயே எந்த படிப்பில் சேர்வது என்பதை முடிவு எடுக்கலாம். உதாதரணமாக, முதல் பிரிவில் உயிரியல் பாடத்தை படித்தவர்களுக்கு மருத்துவம், பொறியியல் என எந்த பிரிவை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். மூன்றாவது பிரிவைத் தேர்ந்தெடுத்தவர்கள் வணிகவியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்கலாம். தொழிற்படிப்பு படித்தவர்கள் குறிப்பிட்ட பாடப்பிரிவில் மட்டுமே உயர் கல்விக்கு செல்ல முடியும்.