How To Prepare Competitive Exam in Tamil | போட்டி தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும்
How to prepare Competitive Exam in Tamil
கற்றல் நோக்கங்கள்
- வேலைவாய்ப்புகளுக்குரிய போட்டி தேர்வு குறித்து அறிதல்
- போட்டி தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பதை புரிந்துகொள்ளுதல்
போட்டி தேர்வுகளுக்கு தயராகுதல்
பல்வேறு அரசு துறைகளில் பல்வேறு பணிகளுக்கு போட்டி தேர்வு நடத்தப்படுகின்றன. பள்ளியிலோ, கல்லூரியிலோ எழுதும் தேர்வுக்கும் போட்டித் தேர்வுக்கு வேறுபாடு இருக்கிறது. பள்ளி தேர்வுகளிலும், கல்லூரி தேர்வுகளிலும் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றால் அந்தந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடலாம். போட்டி தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் என்று இருப்பதில்லை. வேலைக்கு எத்தனை காலியிடங்கள் இருக்கின்றனவோ அத்தனை இடங்களுக்கு மட்டும் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள். ஆனால் இந்த தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண்களும் முக்கியமானவை. அதாவது இந்த தேர்வில் மற்றவர்களை காட்டிலும் எந்த அளவுக்கு மதிப்பெண் பெறுகிறோம் என்பது முக்கியமானது.
Read Also: Entrance Exam Tips in Tamil
போட்டி தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
- போட்டி தேர்வு வினாக்கள் எப்படி கேட்கப்படுகின்றன. அதற்கான பாடத்திட்டம் எதுவும் இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
- அத்துடன், அதிலேயே முதல் கட்ட, இரண்டாம் கட்ட தேர்வுகள் உள்ளனவா என்பதை கவனிக்க வேண்டும்
- போட்டி தேர்வு எழுத விரும்புபவர்கள், அத்தேர்வுக்கான அறிவிப்பு வரும் வரை காத்திருக்காமல் முன்னதாகவே தயாரிப்பில் இறங்கிவிட வேண்டும்.
- போட்டி தேர்வுகளுக்கு பொதுவாக மொழி இலக்கியம், கணித அறிவு, பொது அறிவு ஆகியவை குறித்து கேள்வி கேட்கப்படும்.
- பொதுவாக கேட்கப்படும் கேள்விகளுக்கு நான்கு பதில்களை கொடுத்து அதில் சரியானதை தேர்ந்தெடுக்கும்படி கேட்கலாம். எனவே, உரிய நேரத்திற்குள் பதில் கண்டறிய சரியான பயிற்சி தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- கட்டிரை வடிவில் பதில் எழுத வேண்டியது வரலாம். சுயமாக சிந்தித்து கட்டுரை எழுத நல்ல மொழி அறிவு முக்கியம். அதை, பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- ஏற்கனவே படித்த பாடங்களில் உள்ள அடிப்படை கோட்பாடுகளை கட்டாயம் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
- போட்டி தேர்வு எழுத விரும்புபவர்கள் தவறாமல் செய்திதாள்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முக்கியமான விஷயங்களை குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வுகளை எழுதிபார்த்து பயிற்சி பெறுவது அவசியம். அப்போதுதான் குறிப்பிட்ட நேரத்தில் கேள்விகளுக்கு விடையளிப்பது எளிதாக இருக்கும்.
நேர்முகத் தேர்வு
நேர்முகத்தேர்வின்போது பங்கேற்பவர்களின் உற்சாகம், பேசும் திறமை, உணர்ச்சிவசப்படாமல் பதில் சொல்லும் முறை, தன்னம்பிக்கை, தலைமை பண்பு, படிப்பு பின்னணி போன்றவற்றை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வாளர்களின் கேள்விகள் இருக்கும். வேலைகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நடத்தப்படும்.
நேர்முக தேர்வு எதிர்கொள்ள சில டிப்ஸ்
- நேர்முகத்தேர்வுக்கு சரியான நேரத்திற்கு செல்லுங்கள்.
- அழுத்தமான நிறத்தில் ஆடை அணிவதைத் தவிர்க்கவும், இறுக்கிப்பிடிக்கும் உடைகள் அணியாதீர்கள்.
- தூய்மையான ஆடைகளை அணிந்து செல்லுங்கள், தலைமுடியை நன்கு வாரி இருக்கவும், தொப்பி அணிந்து செல்லக்கூடாது, கறுப்பு கண்ணாடி அணிந்து செல்ல வேண்டாம், வாயில் சூயிங்கம், பாக்கு போன்றவற்றை மென்று செல்லக்கூடாது.
- தேவைப்பட்டால் காண்பிப்பதற்குச் சான்றிதழ்களையும், ஆவணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
- நோ்காணல் அறைக்குள் குனிந்து கொண்டோ, பரபரப்பாகவோ செல்லக்கூடாது, மலர்ந்த முகத்துடன் செல்ல வேண்டும்.
- கேள்விகளை கவனமாகச் கேளுங்கள், சுருக்கமாக தெளிவாக பதில் கூறுங்கள். கேள்வி கேட்பவர்களின் முகத்தை பார்த்து பதில் சொல்லுங்கள்.
- கேள்வியை திரும்பச் சொல்லும்படி கேட்பதை தவிர்க்கவும், பதில் சொல்லும்போது இருக்கையிலிருந்து எழுந்திருக்க வேண்டியதில்லை.
- ஆர்வத்துடன் பதில் சொல்லவும், சுற்றி வளைத்து பதில் சொல்லாதீர்கள்.
- கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால், அதை தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும்.
- வேலைக்கு எந்த அளவுக்கு நீங்கள் பொருத்தமானவாராக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தவும்
அரசு பணி போட்டி தேர்வு நடத்தும் அமைப்புகள்
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - Tamil Nadu Public Service Commission
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் – Tamil Nadu Uniform Services Recruitment Board
- மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் – Union Public Service Commission
- பணியாளர் தேர்வு ஆணையம் – Staff Selection Commission
- ரயில்வே தேர்வு வாரியம் – Railway Recruitment Board
- இந்திய ராணுவம் – Indian Army
- இந்திய கடற்படை – Indian Navy
- இந்திய விமானப்படை – Indian Costal Guard
- இந்திய கடலோரக் காவல்படை – Central Reserve Police Force
- மத்திய ரிசர்வ் போலீஸ் படை – Indian Postal Department
- இந்திய தபால் துறை
TNPSC Helpline Number
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுகள் குறித்த விவரங்கள் அறிவதற்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேரில் அல்லது 1800 419 0598 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.