You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

How To Get an Education Loan in Tamil | கல்வி கடன் பெறுவது எப்படி

How To Get an Education Loan in Tamil

கல்வி கடன் பெறுவது எப்படி 

தகுதியான ஒரு மாணவன் தனது மேல்படிப்பை தொடர்வதற்கு பொருளாதார வசதி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக கல்வி கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் சரியாக நடைபெறுவதற்காக ரிசர்வ் வங்கி தேவையான சட்ட திட்டங்களை வரையறுத்து வங்கிகளுக்கு வழங்கி உள்ளது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குகின்றன. 

Read also: what is higher education in tamil

தங்களது குழந்தைகள் தரமான கல்வியை பெற வேண்டும் என்பதற்காக, கல்வி கடனுக்காக வங்கிகளை நாடும் பெற்றோர்களில் பலருக்கும் வங்கி நடைமுறைகள், கல்விக் கடன் குறித்த தௌிவு இருப்பதில்லை. எனவே கல்விக் கடன் குறித்த சில விவரங்களை மாணவர்களும், பெற்றோரும் அறிந்து கொள்வது முக்கியம்.

கல்விகடன் பெறுவதற்கான தகுதிகள்

வங்கிகளில் கல்விக்கடன் பெறுவதற்கு இந்திய குடிமகனாக இருப்பது அவசியம். கல்விக்கடன் பெறுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவில் பயிலுவதற்கான அனுமதியை பெற்றிருக்க வேண்டும். 

எந்தெந்த படிப்புகளுக்கு கடன் வழங்கப்படும் 

பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு எல்லாவற்றிற்கும் கடன் பெறலாம். பகுதிநேர படிப்புகளும் கல்விக்கடன் பெற தகுதியானவைத்தான். அத்துடன் தற்போது கூடுதலாக, சான்றிதழ் படிப்பை தொடர்வதற்கும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு அந்த படிப்பு பட்டப்படிப்பாகவோ, முதுநிலை பட்டப்படிப்பாகவோ இருக்க வேண்டும். பட்டயப்படிப்பை வெளிநாடுகளில் படிப்பதற்கு கடன் வழங்கப்படுவதில்லை. 

ஆவணங்கள் சேகரிப்பு 

(Bonafide student certificate, Expenditure Estimate) – அதாவது செலவுகளின் பட்டியல். முன்னதாக அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி ஜாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்று, மாற்றுத்திறனாளி ஆக இருந்தால் மாற்றுத்திறனாளி சான்று போன்றவற்றை விண்ணப்பித்து தயராக வைத்திருக்க வேண்டும். 

கல்வி கடன் எவ்வளவு கிடைக்கும் 

பொதுவாக உள்நாட்டு படிப்புகளுக்கு அதிகபட்சம் ரூ 10 லட்சம் வரையும், வெளிநாட்டு படிப்புகளுக்கு அதிகபட்சம் ரூ 20 லட்சம் வரையும் கல்விக்கடன் கிடைக்கும். ஆனால், இந்த தொகை வங்கிக்கு வங்கியும், படிக்கும் கல்வி நிறுவனங்களையும் பொறுத்தும் மாறுபடும். சில வங்கிகள் உள்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ 40 லட்சம் வரையும், வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ 1.25 கோடி வரையும் கூட கடன் வழங்கும். 

கடன் தொகைக்காக ஜாமீன் 

கடன் தொகை ரூ 4 லட்சம் வரை என்றால் பிணையம் தேவையில்லை. ரூ 4 லட்சம் முதல் ரூ. 7.50 லட்சம் வரை என்றால் பெற்றோர், மாணவரது கையொப்பத்துடன் மூன்றாவது ஒரு நபரின் உத்தரவாதம் தேவை. ரூ 7.50 லட்சம் ேமல் என்றால் கடன் தொகைக்கு இணையான நிலம், வீட்டு பத்திரங்கள் ஏதாவது ஒன்றின் விவரங்கள் தேவை. வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கும் இது பொருந்தும். 

கடன், வட்டி எப்போது திருப்பி செலுத்த வேண்டும் 

கடனுக்கான வட்டிைய கடன் பெற்றதில் இருந்து மாதம்மாதம் கட்டி வரலாம். அப்படி திருப்பி செலுத்த வசதியில்லாதவர்கள் முழு கடன், வட்டியை படிப்பு முடிந்து ஓராண்டு அல்லது வேலை கிடைத்த 6 மாதங்களுக்கு பிறகு இதில் எது முதலில் ஏற்படுகிறதோ அந்த மாதத்தில் இருந்து மாதத் தவணையாக கட்டலாம். இந்த கட்டத்தில் இருந்து வட்டிச்சலுகை ெபற்ற மாணவர்களிடம் இருந்து வட்டி வசூலிக்கப்படும். 

எந்த வங்கிக் கிளையை அணுகுவது 

நாடு முழுவதிலும் கல்விக் கடன், கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு உதவிடும் தொடங்கப்பட்டுள்ள வித்யா லட்சுமி இணையதள மூலமே கடந்த ஆண்டு முதல் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. 

அதன்படி, மாணவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை சேகரித்துக் கொண்டு www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்திற்கு சென்று கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். முன்னதாக தங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதோ அந்த வங்கியின் IFSC Code – ஐ கொடுக்க வேண்டும். 

இதை தொடர்ந்து 30 நாள்களில் சம்மந்தப்பட்ட வங்கி கிளையில் இருந்து விண்ணப்பித்த மாணவரை நேர்காணலுக்கு அழைப்பார்கள். அப்போது மாணவர்கள் தங்களிடம் உள்ள சான்றிதழ்களையும் கையுடன் எடுத்துச் சென்று மேலாளரிடம் காண்பிக்க வேண்டும். அவற்றை சரிபார்த்த பிறகே கல்விக் கடன் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 

நேர்காணல் முடிந்ததும் கல்விக் கடனை வங்கி வழங்கும். கல்விக் கடனின் நிலையை இதை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். 

மேலும் சில விவரங்கள் 

கல்விக் கடன் மூலம் உயர் கல்விக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் தாங்கள் தகுதியான கல்வி நிறுவனத்தில் படிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதாவது அந்த நிறுவனம், தான் நடத்தும் படிப்புக்கு ஏற்ப யுஜிசி, ஏஐசிடிஇ, நாக், ஐஎம்ஏ, போன்றவற்றின் அங்கீகாரத்தைப் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். மேற்கண்ட நிறுவனங்களின் அங்கீாரத்தை பெற்று நடத்தப்படும் சான்றிதழ் படிப்புகளுக்கும், தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பவர்களுக்கும் கடன் வழங்கப்படாது. அதேபோல் முடிந்தவரை பொது கலந்தாய்வு மூலம் கல்லூரியை தேர்வு செய்வதுதான் கல்விக்கடன் ெபறுவதில் உள்ள சிரமங்களை குறைக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நிர்வாக ஒதுக்கீடு மூலம் கல்லூரியில் சேருவதில் கல்விக் கடட்டணம் அதிகம் செலுத்துவதுடன் மட்டுமில்லாமல் கல்விக்கடனுக்கான வட்டிச் சலுகையை இழக்க்க நேரிடும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 

ஒரு மாணவன் இளநிலை பட்டப்படிப்புக்கும் அதை முடித்ததும் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கவும் கூட கடன் பெற முடியும். அதேபோல் ஒரே குடும்பத்தை சேர்ந்த எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் தனித்தனியாக கல்விக்கடன் பெற முடியும். தனியார் கல்வி நிறுவனங்களில் நிர்வாக ஒதுக்கீட்டுக் கீழ் படிக்க செல்வபவர்களுக்கு கடன் கிடைக்கும். ஆனால் டியூசன் கட்டணம் மட்டுமே கிடைக்கும் அதே நேரம் அவர்களுக்கு வட்டி சலுகை கிடையாது. 

கல்விக்கடன் ஆவணங்கள் 

10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்ைட, இருப்பிடச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, ஒட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒன்று. பான் கார்டு – மாணவர், பெற்றோர் இருவருக்கும், கல்லூரி அனுமதி அட்டை, கல்லூரி வழங்கும் செலவினங்களுக்கான பட்டியல், ஜாதிச் சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரி எனில் அதற்கான சான்று, வங்கிக் கணக்கின் கடைசி ஆறு மாத அறிக்கை, வெளி நாட்டில் பயில விண்ணப்பிப்பவர் என்றால் கடவுச்சீட்டு, விசா, விமான கட்டனத்துக்கான ரசீது போன்றவற்றை வழங்க வேண்டும். 

விளிம்பு தொகை 

ரூ 4 லட்சம் வரையிலான கடன்களுக்கு விளிம்புத் தொகை இல்லை. ரூ. 4 முதல் ரூ 7.50 லட்சம் வரையிலான கடன்களுக்கு உள்நாட்டி படிப்புகள் என்றால் 5 சதவீதமும் வெளிநாடுகளில் சென்று பயிலுவது என்றால் 15 சதவீதமும் விளிம்புத்தொகை செலுத்த வேண்டும்.

எந்தெந்த செலவுகளுக்கு கடன் கிடைக்கும் 

டியூசன் கட்டணம், விடுதியில் தங்கும் செலவுகள், தேர்வு கட்டணம், ஆய்வுக்கூட கட்டணம் இவை யாவும் முழுமையாக வழங்கப்படும். இதர கட்டணங்களான புத்தகம், சீருடை, திட்ட அறிக்கை தயாரித்தல், கல்விச்சுற்றுலா போன்றவை மொத்த டியூசன் கட்டணத்தில் 50 சதவீதத்திற்கு அதிகம் இல்லாம் வழங்கப்படும். அதே போல் பேருந்து மூலம் தினசரி கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் அந்த கட்டணத்தையும் கடன் தொைகயில் பெற முடியும். 

வட்டி சலுகை

ஒரு சில வங்கிகள், மாணவிகளுக்கு மட்டும், ஒரு சில குறிப்பிட்ட கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் வட்டி சலுகைகள் வழங்குவதும் நடைமுறையில் உள்ளது. தொடர்ந்து இடைவிடாமல் கடனை திருப்பிச் செலுத்துபவர்களுக்கு வட்டிச்சலுகை வழங்கப்படுகிறது.